தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

குழந்தைகளுக்கு கூட தாமாக எங்கும் வெளியே செல்வதற்கு நாம் அவர்களை அனுமதிப்பது இல்லையே? அதேதான். குறிப்பிட்ட வடிவிலமைந்த கல்வித்திட்டம் நாம் வாழ்க்கையுடன் பொருந்திப்போகும் தன்மையை அழித்துவிடுகிறது. மாறுதல்களை ஏற்காதவர்களாக மாறிவிட்டோம். வளைந்து கொடுக்காத அத்தன்மையிலேதான் முழு வாழ்க்கையும் நடைபெறுகிறது. நாம் இந்த தவறான முறைகள் மற்றும் தவறான சுய பாதுகாப்பு முறைகளை எதிர்த்து போரிட வேண்டியுள்ளது. என்னுடைய குழந்தைப்பருவம், என்னுடைய இளமைப்பருவம் என பல்வேறு உடைகளை நம்மேல் போட்டுக்கொள்கிறோம். ஆன்மாவின் மேல் உள்ள இந்த உடைகளை கழற்றி எறிய நமக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. நம்மிடம் வரும் விஷயங்களை அறியக்கூட நமக்கு நேரமிருப்பதில்லை. உண்மையிலே மதிப்பு மிகுந்த முக்கியமான விஷயங்கள் இந்த வகையில் உங்களை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் கூறிய மூன்று வார்த்தைகளில் முதலாவது, கனிவோடு கூடிய தாயின் அன்பு பற்றியது; இரண்டாவது, வாழ்வில் அகதியாக தன்னைக் கருதும் ஒருவரைக் குறித்தது. மூன்றாவதாக கூறும் அர்ஹதனி யின் பொருளான மிக தாமதமான இரவு என்பது எதனைக் குறிக்கிறது? ம