தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 4- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
வாழ்க்கையில் நாம் பெரும்பகுதி அந்நியர்களாக அகதிகளாகவே வாழ்கிறோம்
என்கிறீர்களா?
நாமாகவே அந்நியராக வாழ்கிறம்
என்று கூறமுடியாவிட்டாலும், ஒருவகையில் இதற்கு ஆம் என்றே பதில் கூறவேண்டும். எ.கா:
என்னை நான் கிரீசில் ஒரு அந்நியராகவே உணர்கிறேன். இது என் நாடில்லை என்ற நிலையும்,
எனக்கென வீடு இல்லாத நிலையும் இருக்க நான் இங்கே வாழ்ந்து வருகிறேன். தடை
செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில்(டு மீட்டீயோரோஷமா டோ பெலர்கோவ், 91)
மாஸ்ட்ரோயன்னி இதனை வார்த்தையில் கூறும்விதமாக, ‘‘எல்லைகளை கடந்தும் நாம் இன்னும்
இங்கேயே இருக்கிறோம். எத்தனை எல்லைக்கோடுகளைக் கடந்தால் நம் வீடு சென்றடைவோம்?’’ கூறியிருப்பார்.
உங்களது படங்களில் மக்கள் ஆறு ஒன்றினால் பிரிக்கப்படும்போது ஒவ்வொருவரும்
எப்போதும் நாயகன் புறமே நிற்கிறார்களே?
எனது கடைசி மூன்று படங்களில்
முக்கியமாக இடம் பெற்ற காட்சி என இதனைக் கூறலாம்.
குறிப்பிட்ட சூழ்நிலை ஒன்றில் உங்களை மேலும் மேலும் ஆழமாக உள்ள
செலுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணமா? உணர்ச்சிகளை தடை செய்யப்பட்ட நாரையின் பாதை
படத்தில் வெளிப்படுத்தும் மாஸ்ட்ரோயன்றி போல..?
நான் ஒரு மனிதன் என்று திரும்ப திரும்ப எண்ணுவதையே புரிந்துகொள்வதையே விட்டுவிட்டதாக கருதுகிறேன். அதேநேரத்தில் நான் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமானது. இதனை பராமரித்து வருவதில் எனக்கு வெட்கமொன்றும் இல்லை. பல எளிமையானவற்றை நான் புரிந்துகொள்ளாமல் போயிருக்கலாம் அதாவது நான் மட்டுமே. மற்றவர்கள் அதிகம் கவனிக்க முயற்சி செய்யாத விஷயங்களை புரிந்துகொள்ள தொடர்ந்து நான் முயன்று வருகிறேன். ஒரு விஷயத்தை மிக ஆழமாக நுட்பமாக புரிந்துகொள்வது சிக்கலானதுதான். ஆனால் சினிமா இயக்குநராக அதுதான் எனது பணியாக உள்ளது. ஆழ் மனதில் தெளிவு காண முடியாத கருத்தினை அனைவருக்கும் புரியும்படியாக நேர்த்தியாக எடுக்க முடியும்.
இந்த முறையில்தான் நீங்கள் தொடங்குகிறீர்கள்?
ஆமாம்.
மீண்டும் நாம் பேச வேண்டியிருப்பது இதுதான். நீங்கள் செய்யும் பணி அனைத்தும்
தேடுதலை மையமாக கொண்டதுதானா?
ஆமாம். அதனால்தான் பயணங்கள்
எனது படத்தில் மையமாக உள்ளன. ஒரு படத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். சிறு நகரத்தில்
கதை நகருகிறது. அனைத்து படங்களுமே என்னைப் பொறுத்தவரை பயணம்தான். அனைத்தும்
பயணம்தான்; தேடல்தான். பயணங்களில்தான் நான் அறிவை பெறுகிறேன். பயணங்களில் நான் புரிந்துகொள்ளும்
விஷயங்களை அவையில்லாத தருணத்தில் என்னால் புரிந்துகொள்ள முடியாது. எனவே இறுதியில்
நான் பல்வேறு விஷயங்களை பெற்றிருப்பதாக உணர்கிறேன்.
உங்களது வாழ்க்கை பயணத்தில் நீங்கள் விஷயங்களை சிறப்பாக புரிந்துகொண்டீர்களா
அல்லது குறைவாக புரிந்துகொண்டதாக உணர்கிறீர்களா? எது அதிகரித்திருக்கிறது அறிவா,
இரக்கமா அல்லது குழப்பமா?
அது விஷயத்தைப் பொறுத்ததுதான்.
நீங்கள் என்னிடம் அரசியல் குறித்து அறிய விரும்பினால் அந்த விஷயம் குறித்து நான்
அறிந்தவை இன்றுவரையிலும் குறைவுதான். இறுதியில் அவற்றில் புரிந்துகொண்டது
என்னவென்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. பெரும்பாலான மக்கள் இதுபோல இருக்கக்கூடும்.
குறைந்தபட்ச நபர்கள் நிலைமை இப்படித்தான். மனித உறவுகள் குறித்து பேசினால் அதில்
புரிந்துகொள்ளவும் ஏதுமில்லை. அவசியமும் கூட இல்லை. விஷயங்கள் இத்தகைய
முறையில்தான் உள்ளன. மனித உறவுகள் என்பனவற்றை நீங்களே கண்டறிந்து
கொள்ளவேண்டியதுதான்; அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதில் அவர்கள்
பலவீனங்கள், சந்தோஷங்கள், வலிகள் ஆகியவை இருக்கும். இவற்றில் நீங்கள்
கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சில விஷயங்களுக்குள் ஆழமாக சென்று
புரிந்துகொள்ள முடியாதது குறித்து வருந்த அவசியமில்லை என்பதுதான் அது.