இடுகைகள்

உடல் பாகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லிப்ஸ்டிக்கில் மீனின் உடல் பாகங்கள் பயன்படுத்தப்படுகிறதா? - உண்மையா, உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? லிப்ஸ்டிக்கில் மீனின் உடல்பாகங்கள் பயன்படுகிறது! ரியல் உண்மை. லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றிலும் மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. மீன் செதில்கள் ப்யூரின் (Purine) என்ற வேதிப்பொருளால் உருவானவை. ப்யூரின், ஒளியை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான், மீன் செதில்களைக் கொண்ட லிப்ஸ்டிக்கைப் பூசும்போது பளீரென்ற பிரகாச தன்மை கிடைக்கிறது. இதுபோலவே பிரகாசம் தரும் செயற்கை வேதிப்பொருட்களும் உள்ளன. ஆனால் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.  நவீன கத்தரிக்கோலின் தந்தை, லியனார்டோ டாவின்சி! ரியல் உண்மையல்ல. டாவின்சி, தனது ஓவிய கேன்வாஸை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை பயன்படுத்தினார். இதனால் அவர்தான் கத்தரிக்கோலை உருவாக்கினார் என கூறுகின்றனர். ஆனால், கி.மு. 1500களில் தொன்மை எகிப்தியர்கள் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியுள்ளனர். 1761ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஷெஃபீல்டைச் சேர்ந்த ராபர்ட் ஹின்ச்லிஃப் (Robert Hinchliffe) ஸ்டீலைப் பயன்படுத்தி கத்தரிக்கோல்களை உற்பத்தி செய்தார். இவரே நவீன கத்தரிக்கோலின் தந்தை ஆவார்.  https://www.huffpost.com/entry/fish-scales-lipstick_n_