இடுகைகள்

மீத்தேன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற்பத்தி செய்ய ப

பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து மின்சாரம்!

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

காற்றிலுள்ள மீத்தேனைப் பயன்படுத்தி புரத உணவுகள்!

படம்
  எழில் சுப்பையன், ஸ்ட்ரிங் பயோ மீத்தேன் மூலம் உணவு தயாரிக்கலாம்! 2013ஆம் ஆண்டு எழில் சுப்பையன், அவரது கணவர் வினோத் குமார்  ஆகியோர் இணைந்து ஸ்ட்ரிங் பயோ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். பெங்களூருவில் செயல்படும் இந்த நிறுவனம் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தி, புரத உணவை உற்பத்தி செய்து வருகிறது. ஆசியாவிலேயே பதப்படுத்தும் முறையில் மீத்தேன் மூலம் புரதங்களை  உற்பத்தி செய்யும் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஸ்ட்ரிங் பயோ தான்.  ”எப்படி சர்க்கரையை ஈஸ்டாக மாற்றி மதுவை தயாரிக்கிறார்களோ அதை முறையைத் தான்  பின்பற்றுகிறோம். இதில் சற்றே மாறுபாடாக, நாங்கள் பயன்படுத்தும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் மீத்தேனை உண்டு அதனை புரதமாக மாற்றுகின்றன” என்றார் ஸ்ட்ரிங் பயோ துணை நிறுவனரான எழில் சுப்பையன். மீத்தேனை இயற்கை எரிவாயு, உணவுக்கழிவுகளிலிருந்து பெறுகின்றனர். மீத்தேனிலிருந்து உருவாக்கும் புரதத்தை, விலங்குகளுக்கான உணவாக மாற்றி விற்று வருகிறது ஸ்ட்ரிங் பயோ நிறுவனம்.  ”நாங்கள் குறைந்தளவு நீர், நிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை உற்பத்தி செய்கிறோம். பிற தாவர, விலங்கு இறைச்சி வகைகளை விட பதப்படுத்தும் முறையில்