இடுகைகள்

வில் ஃபெரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோதா பயல்கள் ஹீரோ ஆகும் கதை - தி அதர் கைஸ்!

படம்
தி அதர் கைஸ் இயக்கம் - ஆடம் மேக்கே ஒளிப்பதிவு - ஆலிவர் வுட் இசை - ஜான் பிரியன் சாகச வீர ர்களாக சிலர் ஆபீசில் இருப்பார்கள். சிலர் வாய்ப்பே இன்றி டெஸ்கில் சிஸ்டன் தட்டிக்கொண்டு இருப்பார்கள். இந்த இரு பிரிவுக்கும் இடையே சண்டை வந்தால் என்னாகும்? ஆலன்,டெடி என்ற இருவருமே சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களுக்கு உள்ளாகி டெஸ்கில் டாக்குமெண்டுகளை தட்டி வருகின்றனர். இதனால் சக ஆபீஸ் வாசிகள் கடுமையாக கிண்டல் செய்கின்றனர். இதனால் எரிமலை ஆகும் டெரி, ஆலனை தன் சகாவாக இணைத்துக்கொண்டு முதலீடு தொடர்பான வழக்கு ஒன்றை துப்பறிவு செய்ய இறங்குகிறார். இதில் நடக்கும் காமெடி களேபரங்கள்தான் கதை. வில் ஃபெரல் படத்தின் நாயகன். கிளாமரான மனைவியை வைத்துக்கொண்டு தன் நண்பன் அவளோடு நட்புகொள்வதை தடுப்பது, முன்னாள் காதலியின் கோபத்தை சமாளிப்பது, திடீரென கிளம்பும் அசாதாரண கோபம், கல்லூரி வாழ்க்கையில் மாணிக் பாட்சாவாக பெண்களை எப்படி கையாண்டார், தொழில் செய்தார் என சொல்லும் போர்ஷன்கள் என சிரிப்பை வாரி இறைக்கிறார். மார்க வால்பர்க், இவருக்கு சரியான ஜோடி. நிறைய இடங்களில் கோப ப்பட்டு அதனால் துறைரீதியான நடவடி

அன்பைக் கற்றுக் கொடுங்கள்- டாடிஸ் ஹோம் 2

படம்
டாடிஸ் ஹோம் 2 இயக்கம் சீன் ஆண்டர்ஸ் கதை சீன் ஆண்டர்ஸ், ஜான் மோரிஸ் இப்பாகத்தில் பிராட், டஸ்டி இருவரும் தங்களது குழந்தைகளை பொறாமையின்றி பராமரிக்க முயல்கின்றனர். ஆனால் விதி விளையாட, பிராட், டஸ்டியின் இரு தந்தைகளும் கிறிஸ்துமஸைக் கொண்டாட வருகின்றனர். இப்போது டஸ்டிக்கு தனி குடும்பம் இருக்கிறது. அவரின் மனைவியின் குழந்தை டஸ்டியை ஏற்க மறுக்கிறது. இதனை டஸ்டி எப்படி சமாளிக்கிறார் என்பதோடு, வரும் தந்தைக்கும் டஸ்டிக்கும் ஏழாம் பொருத்தம். இவர்கள் எப்படி ஒன்றாகிறார்கள், குழந்தைகளிடம் இருக்கும் ஏக்கம் எப்படி தீருகிறது என்பதுதான் கதை. மெல் கிப்சன், டஸ்டியான மார்க் வால்பெர்க்கின் தந்தையாக வந்து பிராடையும் அவரது தந்தையும் ஏக்கமாக பார்க்கிறார்கள். வாழ்க்கையை சிறிது காமெடியாக அணுகும் படம் என்பதால், அனைத்து காட்சிகளும் அப்படியே இருக்கிறது என கூறமுடியாது. பிராடின் தந்தையை அவரது மனைவி விவாகரத்து செய்த விஷயம் அனைவருக்கும் தெரிய வருவது சங்கடமான காட்சி. அமெரிக்காவின் குடும்ப அமைப்பு முறை திரும்ப நம் கண் முன் விரிகிறது. இதில் பிராட் எப்போதும் நிதானமாக அகிம்சை முறையில் பிரச்னைகளை அணுக

தந்தைகளுக்கிடையே உரிமைப் போராட்டம் - டாடிஸ் ஹோம் 1

படம்
டாடிஸ் ஹோம் -2015 ஆங்கிலம் இயக்கம் - சீன் ஆண்டர்ஸ் கதை - பிரையன் பர்ன்ஸ் திரைக்கதை - சீன் ஆண்டர்ஸ், பிரையன் பர்ன்ஸ், ஜான் மோரிஸ் இசை - மைக்கேல் ஆண்ட்ரூஸ் அமெரிக்க குடும்ப முறையில் இருக்கும் சிக்கல்கள்தான் கதை. திருமணம் செய்து பிரிந்து மீண்டும் திருமணம் செய்து என பயணிக்கும் அவர்களின் திருமண முறையால், குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலை பேசுகிற படம் இது. வில் ஃபெரல் படத்தில் நடிகராக பின்னி எடுத்திருக்கிறார். அதோடு படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். தன்னுடைய மனைவியின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக நினைக்கிறார். ஆனால் அவர்கள் இவரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் அந்த மனநிலையை மாற்ற முயல்கிறார். அப்போது, அக்குழந்தைகளின் உயிரியல் தந்தை அங்கு வர, இரு தந்தைகளுக்குள்ளும் நடக்கும் முட்டல் மோதல்கள்தான் கதை. மார்க் வால்பெர்க் உயிரியல் தந்தை என்ற பெருமிதம் காட்டினாலும், குழந்தைகளுக்கான செய்யும் வேலைகள், பொறுமை, நிதானம் என்று வரும்போது ஆஹா... என பேக்கடிக்கிறார். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் தத்தளிக்கிறார்.  இவர்களின் கோபதாபத்திற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் லிண்டா