அன்பைக் கற்றுக் கொடுங்கள்- டாடிஸ் ஹோம் 2





Image result for daddy's home 2



டாடிஸ் ஹோம் 2

இயக்கம் சீன் ஆண்டர்ஸ்

கதை சீன் ஆண்டர்ஸ், ஜான் மோரிஸ்



இப்பாகத்தில் பிராட், டஸ்டி இருவரும் தங்களது குழந்தைகளை பொறாமையின்றி பராமரிக்க முயல்கின்றனர். ஆனால் விதி விளையாட, பிராட், டஸ்டியின் இரு தந்தைகளும் கிறிஸ்துமஸைக் கொண்டாட வருகின்றனர்.

இப்போது டஸ்டிக்கு தனி குடும்பம் இருக்கிறது. அவரின் மனைவியின் குழந்தை டஸ்டியை ஏற்க மறுக்கிறது. இதனை டஸ்டி எப்படி சமாளிக்கிறார் என்பதோடு, வரும் தந்தைக்கும் டஸ்டிக்கும் ஏழாம் பொருத்தம். இவர்கள் எப்படி ஒன்றாகிறார்கள், குழந்தைகளிடம் இருக்கும் ஏக்கம் எப்படி தீருகிறது என்பதுதான் கதை.

Image result for daddy's home 2


மெல் கிப்சன், டஸ்டியான மார்க் வால்பெர்க்கின் தந்தையாக வந்து பிராடையும் அவரது தந்தையும் ஏக்கமாக பார்க்கிறார்கள்.

வாழ்க்கையை சிறிது காமெடியாக அணுகும் படம் என்பதால், அனைத்து காட்சிகளும் அப்படியே இருக்கிறது என கூறமுடியாது. பிராடின் தந்தையை அவரது மனைவி விவாகரத்து செய்த விஷயம் அனைவருக்கும் தெரிய வருவது சங்கடமான காட்சி. அமெரிக்காவின் குடும்ப அமைப்பு முறை திரும்ப நம் கண் முன் விரிகிறது. இதில் பிராட் எப்போதும் நிதானமாக அகிம்சை முறையில் பிரச்னைகளை அணுகுபவர். அவரிடம் ஈர்க்கப்பட்ட டஸ்டியும் அம்முறையில் இருக்கிறார். ஆனால் அதை டஸ்டியின் தந்தை கிண்டலித்து ஆணாக இரு என சண்டைக்கு இழுக்கிறார்.

இதில் நேரும் கலாட்டாக்கள்தான் படத்தை ரசிக்க வைக்கின்றன. மேற்குலகில் அன்பைக் காட்டும் வழிமுறைகள் வெளிப்படையானவை என்பதற்கான காட்சிகள் படத்தில் நிறைய உண்டு. வன்முறையை வெளிக்காட்ட தயங்காதபோது, அன்பைக் காட்டுவதில் என்ன பிரச்னை என நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

Image result for daddy's home 2

வில் ஃபெரல், மார்க் வால்பெர்க், மெல்கிப்சன் இதிலும் ஜொலித்துள்ளனர். ஜான்சேனா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அதேதான். டஸ்டி முன்னர் இந்தியன் மோட்டார் சைக்கிளில் வருவாரே அதே கர்வத்துடன்தான். அவருக்கும் பாடம் எடுத்து பாட்டு பாட வைக்கிறார்கள். பிராடின் அம்மா, அவரது தந்தையை விவாகரத்து செய்துவிட்டு புதிய கணவருடன் வரும் காட்சி அடுத்தபாகத்திற்கான தூண்டில்தான்.

கிறிஸ்துமஸிற்கான படம்தான் இது.