இருமடங்கு புத்திசாலித்தனத்தின் விளைவு?
டாக்டர். எக்ஸ்
நாம் இப்போது இருப்பதை விட புத்திசாலியாக இருந்திருந்தால்.....
ஜியோமி போன்களை நோக்கியாவுக்கு முன்பே கண்டுபிடித்திருப்போம். 48 எம்பி கேமராவை வைத்து கிளு கிளு வீடியோக்களை உருவாக்கி பஞ்சாயத்து செய்திருப்போம். பிட்காயின்களில் பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்திருப்போம். ஹாலோகிராமில் பல்வேறு வித்தைகள் செய்திருப்போம். விண்வெளியில் காலனிகள் அமைந்திருக்கும் என ஏகமாக கற்பனைகள் பறக்கிறதா?
பத்தொன்பதாம் நூற்றாண்டு புத்திசாலி ஆய்வாளரான ஐசக் நியூட்டனுக்கு கூட நாம் ஐக்யூ டெஸ்ட் செய்யவில்லை. அதிபுத்திசாலி என்பதால் ஐக்யூ டெஸ்ட் 200 மதிப்பெண்களுக்கு வைக்கப் போவதில்லை. புத்திசாலித்தன காரியங்களை விட அதை நிரூபிக்கத்தான் அதிக விஷயங்கள் செய்யவேண்டியிருக்கிறது இல்லையா?