காணாமல் போகும் ஸ்டெதாஸ்கோப் - புதிய தொழில்நுட்பங்களின் வருகை!





Baby Heart GIF
giphy.com



ஸ்டெதாஸ்கோப் இல்லாத ஒருவரை டாக்டர் என அவரே சொன்னாலும் மக்கள் நம்புவதில்லை. ஆனால் இனி ஸ்டெதாஸ்கோப்பின் தேவை கிடையாது. தொழில்நுட்பம் அந்தளவு வளர்ந்துவிட்டது. வீட்டில் நீங்களே உங்களை சோதித்துக்கொள்ளுமளவு டெக் உலகம் வளர்ந்திருக்கிறது. கூடுதலாக டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப் இதயத்துடிப்பைக் கணிக்கிறது. கையில் இலகுவாக பயன்படுத்தும் புதிய கருவிகளும் மொபைல் போனுடன் இணைத்துப் பயன்படுத்துமளவு வந்துவிட்டன.


அமெரிக்காவில் உள்ள பட்டர்ஃப்ளை இன்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கருவியை நோயாளிகளே பயன்படுத்தலாம். இம்முறையில் நாம் நம் உடல்நிலையை படம் எடுத்து மருத்துவருக்கு அனுப்பலாம். அவர் பிரச்னையைப் பொறுத்து உங்களுக்கு சிகிச்சை வழங்குவார். ஸ்கைப்பில் வழங்குவாரா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது அவரவர் வசதியைப் பொறுத்தது.

ஸ்டெதாஸ்கோப்பில் நம் நெஞ்சிலும், முதுகிலும் வைக்கும் உலோகப்பரப்பு ஒலியை பெரிதுபடுத்திக் கொடுக்கிறது. இது, மருத்துவர் காதில் பொருத்தியுள்ள கருவியில் கேட்கிறது. மருத்துவப் பயிற்சி பெற்றுள்ளவருக்கு இதன் மாறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

ரெனெ லானெக் என்ற பிரெஞ்சுக்காரர், முதல் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். முதலில் உருவான ஸ்டெதாஸ்கோப் என்பது மரத்தாலான ஓரடித் துண்டுதான். அதில் மார்பு, முதுகில் வைத்துக் கேட்டால் இதயத்துடிப்பு கேட்கும். அதை வைத்து மருத்துவம் செய்தார்கள். ஆனால் என்ன பெண்கள் வரும்போதுதான் நிலைமை சிக்கலானது. அதனால் என்ன, ஸ்டெதாஸ்கோப் அதனால்தான் பிறந்தது.

நன்றி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பிரபலமான இடுகைகள்