என்ஜிஓக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? ஒரு அலசல்







Happy Hour Drinking GIF




தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி!


தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயலாற்றத் தொடங்கியபின் அரசின் பெரும் பாரம் குறைந்துவிட்டது. அரசு செய்யவேண்டிய பல விஷயங்களை தன்னார்வ நிறுவனங்கள் செய்து அதற்கு சிறிய தொகையை பெறுவதோடு, சமூகத்தின் நல்ல பெயரையும் பெறுகிறார்கள். ஏறத்தாழ அரசு மீதான கோபத்தை தீர்ப்பவர்கள் என்று கூட இவர்களைச் சொல்ல முடியும். இவர்களால் அரசு அமைக்க முடியுமா என்றால், டில்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைகாட்டலாம்.

ஊழலுக்கான மசோதா, போராட்டம் எனத் தொடங்கி மக்களின் மீதான கோபத்தை சரியாக அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு ஓட்டுபோட்டது முழுக்க மத்திய நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களின் வளர்ச்சியை டேட்டாவாக பார்ப்போம்.


2014- 18 வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சமூகச் செயற்பாடுகளுக்கு கிடைக்கும் தனியார் நிறுவன நிதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிதி மேற்சொன்ன காலகட்டத்தில் கிடைத்ததுதான்.

மத்திய அரசின் பல்வேறு சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களை க்ரீன்பீஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்து போராடின. உடனே அவற்றுக்கு கிடைத்து வந்த  பண உதவிகள் எங்கிருந்து வருகின்றன என கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டன. இம்முறையில் 40 சதவீத அந்நிய நாட்டு நிதியுதவிகள் நிறுத்தப்பட்டன.

2018 ஆம் ஆண்டில் மட்டும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் சமூக செயற்பாடுகளுக்கு அரசு வழங்கியுள்ளது.

இதே ஆண்டில் தனியார் நிறுவனங்கள் 70 ஆயிரம் கோடி ரூபாயை சமூகச் செயற்பாடுகளுக்கு வழங்கியுள்ளன.

ஐ.நா சபை கூறியுள்ள சூழலுக்கு நாடு எனும் திட்ட நோக்கத்தை 2030க்குள் அடைவதில் இந்தியாவுக்கு தேக்கம் உள்ளது. தேக்கம் திட்டமிடுவதிலும், நிதி விஷயத்திலும்தான். 4.2 லட்சம் கோடி ரூபாய் இம்முறையில் தேவைப்படுகிறது.


நன்றி - இடி மேகசின்