செல்போனில் அதிகரிக்கும் சூதாட்ட மோகம்! - இங்கிலாந்து மருத்துவமனையின் தீர்வு!


Image result for addiction



அதிகரிக்கும் அடிமைத்தனம்!


செய்தி: ஸ்மார்ட்போன்களின் வழியாக திரைப்படங்கள், விளையாட்டு, டிவி தொடர்கள் ஆகியவற்றின் மீதான அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து அரசின் ஆய்வுகள் கூறுகின்றன.


இன்று பேருந்துகளிலும், கார்களிலும் செல்பவர்கள் அனைவருமே போனில் ஏதாவது செய்தியைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அது திரைப்படமாக, விளையாட்டாக அல்லது சமூகவலைத்தள பதிவாக கூட இருக்கலாம்.  மது, புகையிலை போன்ற அடிமைத்தனத்தை இவை ஏற்படுத்துகின்றன என்று உளவியலாளர்கள் கூறி வருகின்றனர்.  இங்கிலாந்து அரசு அமைப்பான கேம்ப்ளிங் கமிஷன் 2017 ஆம் ஆண்டு ஆய்வொன்றைச் செய்தது. இதில் 4 லட்சம் பேர்களுக்கு மேல் ஆப் வழியாக சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

தற்போது இளைஞர்களிடையே  இணையம் சார்ந்து அடிமைத்தனம் அதிகரித்துள்ளது. “அடிமைத்தனத்தைப் பழக்கம், பொருட்களை தொடர்ச்சியாக கவனமின்றி பயன்படுத்துவது என்றுகூட கூறலாம்” என்கிறார் அடிக்சன் எனும் பத்திரிகையின் ஆசிரியரும், புகையிலை ஆராய்ச்சியாளருமான ராபர்ட் வெஸ்ட். இணையம் சார்ந்த நெட்ஃபிளிக்ஸ் அமேசான் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் தினசரி நடவடிக்கைகளை அவை பாதிக்காதவரை பிரச்னை இல்லை. பாதித்தால் அவற்றை நாம் சரிசெய்வது அவசியம்.
மூளையில் ஏற்படும் வேதிமாற்றங்கள் இதற்கு முக்கியக்காரணம். போதைப்பொருட்களை பயன்படுத்தும்போது மூளையில் டோபமைன் எனும் வேதிப்பொருள் சுரப்பு அதிகரிக்கிறது. இது சுகமான அனுபவம் தருகிறது. இதன்விளைவாக போதைப்பொருட்கள், மது ஆகியவற்றின் மீதான அடிமைத்தனம் அதிகரிக்கிறது.

 “மது அருந்துதல், புகைப்பிடிப்பது ஆகியவற்றில் இரண்டில் எதனை நிறுத்தினாலும் மற்றொன்றின் நுகரும் அளவு குறையும்” என்கிறார் ராபர்ட்வெஸ்ட். மேலும் ஒரு அடிமைத்தனமான பழக்கத்தை நிறுத்தினால் இன்னொரு பழக்கம் உருவாகும் என்பதை இவர் மறுக்கிறார்.

 2008 ஆம்ஆண்டு உளவியலாளர் போடன் ஜோன்ஸ், சூதாட்ட அடிமைத்தனத்தை நீக்குவதற்கென மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். அடிமைத்தனத்தின் தீவிரத்திற்கு இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும்? உடல், உளவியல் என இரண்டில் சூதாட்டம் போன்ற விளையாட்டுகள் உளவியல் சார்ந்தவை. ”தனிமைப்படுவது, ஆர்வம் இழப்பு, குடும்பத்திற்கென நேரம் ஒதுக்காதது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் உஷாராகவேண்டும்” என்கிறார் உளவியலாளர் போடன் ஜோன்ஸ். அடிமைத்தனத்தில் சிக்காமலிருக்கும் ஒருவரின் சுயக்கட்டுப்பாடு தவிர வேறு மருந்தே கிடையாது.

தகவல்:பிபிசி எர்த்