சமூகச்செயற்பாடுகளுக்கு தனியார் அளித்த நிதியுதவி!



Chad Johnson Yes GIF by Twitter
giphy.com


அரசு மட்டுமல்ல, இன்று தனியாரும் மக்களின் நலனில் பங்கெடுக்கிறார்கள். சட்டத்தின் நிர்பந்தம் இருக்கிறதுதான். ஆனாலும் அதிலும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி திட்டங்களை செயற்படுத்துவதில் தனியாரின் பங்கு முக்கியமானது. மிகச்சில ஆண்டுகளில் அரசு ஒழுங்காணையம் போலத்தான் செயற்பட விருக்கிறது. உலக வர்த்தக கழகம், உலக வங்கி ஆகியவற்றின் நிர்பந்தம் அப்படி இருக்கிறது.


2014-18 காலகட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் திட்டத்திற்காக செலவழித்த தொகை 13 ஆயிரம் கோடி ரூபாய். 


இதன் விளைவாக இத்துறை 12 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. 

தனியார் நிறுவனங்கள் போக, தனி நபர்கள் மட்டும் 43 ஆயிரம் கோடி ரூபாயை சமூக செயற்பாடுகளுக்காக செலவிட்டுள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் அளிக்கும் நிதியுதவியை ஒப்பிட்டால் 21 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது.

2014 -18 ஆம் ஆண்டில் தனிநபர் நிதியுதவி 60 சதவீதமாக உள்ளது. அதாவது, இந்த பங்கு சமூக செயற்பாடுகளுக்கு மட்டுமேயானது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சாதனை மட்டுமல்ல சறுக்கல்களும் உண்டு

இந்தியாவில் உள்ள 40 சதவீத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சரியான தலைமைத்துவ ஆட்கள் இன்றி தடுமாறி வருகின்றன. மேலும் 50 சதவீத நிறுவனங்கள் திறமைசாலிகளை தங்கள் அமைப்புக்கு இழுப்பதற்கான நிதியுதவி இன்றி தவிக்கின்றன.

இந்தியாவிலுள்ள 97 சதவீத தன்னார்வ நிறுவனங்கள் தலைமைத்துவ ஆட்கள் தேவை, அதற்கான தேவை உள்ளது என்று கூறிவருகின்றன.

நன்றி - இடி மேகசின்








பிரபலமான இடுகைகள்