ஜனநாயகத்தை மலர வைக்கிறதா டெலிகிராம்?






Image result for hong kong protest using telegram channel





இணையம் சார்ந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நிறுவனங்கள் மெல்ல ஏற்படுத்தி வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்காக அரசியல்வாதிகளுக்கு ஏற்ப பயனர்களின் பதிவுகளை அழிப்பது, நீக்குவது போன்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இதனால் பலரும் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களிலிருந்து விலகிவருகின்றனர். திறமூல மென்பொருள் ஆப்பான டெலிகிராமில் பதிலுக்கு இணைகின்றனர். டெலிகிராம் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் நிகோலாய், பாவ்லோவ் என்ற இருவரால் 2013 இல் தொடங்கப்பட்டது.

என்ன சிறப்பு இதில் இருக்கிறது? நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே படங்கள் உங்கள் போனில் இறங்கும் இல்லையெனில் க்ளவுட் கம்ப்யூட்டரில் மட்டுமே இருக்கும். இதனால் வாட்ஸ்அப் இயங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் நம் போனுக்கு ஏற்படாது. குறைந்த ரேம் கொண்ட போனிலும் டெலிகிராம் சிறப்பாக இயங்கும். இதில் எந்த குழுவிலும் நீங்கள் இணையலாம். எந்த அட்மினும் உங்களை கேள்வி கேட்க முடியாது. இல்லையென்றால் அக்குழுவில் உள்ள விஷயங்களை தரவிறக்கிக்கொள்ள முடியும்.

சரி விடுங்கள். இதனால் நடைமுறை பயன் என்ன? ஜனநாயகப் பயன் என்ன என்று கேட்கிறீர்கள். 2011 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் எப்படி அரபு வசந்த த்திற்கு உதவியதோ அதேபோல ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டங்களுக்கு டெலிகிராம் உதவுகிறது. அன்று தொடங்கிய இணைய புரட்சியை வேல் கோனிம், இப்புரட்சி ஃபேஸ்புக்கில்தான் தொடங்கியது. இதன் வளர்ச்சி பற்றி நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என சிஎன்என் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் நிலைமை இன்று வெகுவாக மாறியுள்ளது. ஃபேஸ்புக்கின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. காரணம், தகவல்களை கொள்ளையிட அனுமதித்தது, தானாகவே சேகரித்து காசு பார்த்தது எல்லாமும் இதில் சேரும். இதிலுள்ள என்கிரிப்ஷன் வசதியை  போராட்டக்கார ர்கள் பயன்படுத்தி தனி இயக்கமாக இயங்கி வருகின்றனர். போராட்டங்களை கச்சிதமாக நடத்தி அரசை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர். இவர்களின் திட்டங்களை அரசு கண்காணிக்கவும் முடியவில்லை என்பதுதான் விஷயம்.

டெலிகிராமோடு சிக்னல், மேட்மோஸ்ட் ஆகிய ஆப்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் என்கிரிப்ஷ்ன் செய்வதற்கான கருவிகளைக் கொடு என ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் டெலிகிராமை மிரட்டி வருகின்றன. இப்போராட்டம் எதுவரை நீளும் என்று தெரியவில்லை. கூகுள், ஃபேஸ்புக் போன்றவை சீனா போன்ற நாட்டை தணிக்கை என்ற விஷயத்திற்காக கைவிட விரும்பவில்லை. ஆப்பிள் போன்ற நாடுகள் தங்களின் ஆப்பை ஹாங்காங் போராட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு அவர்களாகவே தடை விதித்து விற்கிறார்கள். வேறுவழியில்லை என்று புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஸ்பெயினை எதிர்த்து கடலோனிய மக்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் டெலிகிராமை பயன்படுத்துகிறார்கள். இல்லையென்றாலும் புதிய ஆப்பை அவர்களாகவே உருவாக்குவார்கள். அநீதி கம்பெடுத்து பாய்ந்தாலும், ஜனநாயகம் அதை சமாளிப்பதற்கான கேடயத்தை எப்போதும் முதுகில் வைத்திருக்கிறது. அதை உடைப்பது அவ்வளவு எளிதல்ல.

நன்றி - ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் - லியோனிட் பெர்சிட்ஸ்கி.