இந்திய கிராமங்களின் வறுமை நிலை! - சாய்நாத் பேசும் உண்மைகள்!
இந்திய மாநிலங்கள் தொழில் யுகங்களுக்கு முன்னர், சிறிய தொழில்களை நம்பி முன்னர் இருந்நதனர். தாழ்த்தப்பட்ட மக்கள் உணவுப் பொருட்களை விற்கும் கடைகளை தொடங்குவது சிரமம். எங்கள் ஊரில் தாழ்த்தப்பட்ட ஒருவர்தான் சீசனுக்கு கேழ்வரகு கூழ் (ராகி கூழ்) கடை வைத்தார். சாலையில் வண்டி ஓட்டி வருபவர், வாங்கிக் குடிக்கத்தான். எங்கள் ஊரில் சாதிக்கொரு தொழில் உண்டு. தலித் உணவுக்கடை வைத்தால் எப்படி? என மிரட்டி அவரது கடையை காலி செய்து கவுண்டர்கள் அந்த இடங்களை ஆக்கிரமித்து இப்போதும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த விஷயங்கள் நகரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. கிராமம் என்றால் அழகானது, அங்கு இருப்பவர்கள் பரம யோக்கியர்கள் என்று பகல் கனவு பலரும் காண்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் எப்படி கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதை அறிய நிறைய சம்பவங்களை உதாரணமாக கூறலாம். முக்கியமாக அங்கு வாழ்ந்த வந்த, தற்போது நகரில் உள்ளவர்கள் இதற்கு சரியானவர்கள்.
பி.சாய்நாத் அதே காரியத்தைத்தான் 1996 இல் செய்திருக்கிறார். இந்த நூலுக்கான களப்பணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா உதவியிருக்கிறது. சாய்நாத்தின் விரிவான கட்டுரைகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டு, முக்கியமான கேள்விகளை அன்று எழுப்பியிருக்கிறது. பதிலுக்கு அரசின் வெளிப்பாடுகள் என்ன என்பதையும் பதிவு செய்து தனி அத்தியாயமாக வெளியிட்டிருக்கிறார் சாய்நாத்.
பி.சாய்நாத் |
மொத்தம் பஞ்சத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் எட்டு மாநிலங்களுக்குச் சென்று அங்கு நிலவும் பாதிப்புகள், வறுமைக்கு காரணங்கள், அரசு திட்டங்களின் நிலை, சாதி பாகுபாடுகள், வளர்ச்சி திட்டங்களுக்கான இடம்பெயர்வு, இடைத்தரகர்களின் உறவு என பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார் சாய்நாத். நூலுக்கு உழைத்த உழைப்பிற்கு அங்கீகாரமாக ராமன் மகசசே விருதும் பெற்றுள்ளார்.
கோமாளிமேடை டீம்