இன்று நடப்பதை நேற்றே அறிய முடியுமா? - தேஜா வூ கதை!



deja vu women GIF by Half The Picture




தெரிஞ்சுக்கோ  - தேஜா வூ

தேஜா வூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரெஞ்சில் இதற்கு முன்னமே பார்த்தது என்று பொருள். பொதுவாக தாராளவாத கருத்துகள், யாத்ரீகராகச் சுற்றுவது, நிறைய நூல்களைப் படிப்பது, டஜன் கணக்கிலான படங்களைப் பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தேஜா வூ பாதிப்பு இருக்கிறது.

உளவியல் பூர்வமாக இது சாதாரணமானது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சம்பவங்களை முன்னமே பார்த்தது போல் இருப்பது யாரையும் சற்றே அதிர வைக்கும். அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம்.

உலகில் மூன்றில் இருபங்கு பேருக்கு தேஜா வூ அனுபவம் நடந்திருக்கிறது. எனவே உங்களை நீங்களே அமானுஷ்யமானவர், அபூர்வமானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தேஜா வூ அனுபவங்கள் நடப்பதற்கான குறைந்தபட்ச வயது எட்டு முதல் ஒன்பது வயது வரை.

இது பற்றி 30க்கும் மேலான விளக்கங்கள் அறிவியலில் உண்டு. இவற்றைக் கொஞ்சம் நம்பலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.


உலகில் 32 சதவீதம் பேருக்கு தேஜா வூ அனுபவம் ஏற்படுகிறது என்றால் அவர்களில் பலரும் ஆண்டுக்கு நான்கு முறை அங்குமிங்கும் பயணிப்பவர்கள். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே எங்கும் பயணிக்காதவர்கள். ஆனால் இவர்களுக்கும் தேஜா வூ அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

தேஜா வூ அனுபவம் ஏற்படுவதற்கான இடைவெளி 10 முதல் 30 நிமிடங்களாக உள்ளது.

இதில் 36 வகைகள் உண்டு.


நன்றி - க்வார்ட்ஸ்

பிரபலமான இடுகைகள்