இடுகைகள்

அருண் நரசிம்மன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனநிலையைச் சொன்ன நாவல்! - கடிதங்கள்

படம்
  ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி மதிப்பிற்குரிய ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? தேர்தல் முடிந்தபிறகு ஊரில் சென்று வேலை செய்வேன் என்று நினைக்கிறேன். வங்கியில் சில வேலைகள் பாக்கி உள்ளன. நேருவின் நூலில் மக்கள் உரிமைகள், பண்பாடு, மதம் என இருபகுதிகளைப் படித்து முடித்துள்ளேன். மொழிபெயர்ப்பு நா.தர்மராஜன். வாசிக்க தட்டாமல் சரளமாக உள்ளது. நான் எழுதுவதிலும் இந்த ஒழுங்கைக் கொண்டு வரவேண்டும்.  பாலபாரதி சார் மயிலாப்பூர் வந்தபோது என்னை அழைத்தார். பஜார் தெருவில் மோர் மார்க்கெட் அருகே சந்தித்தோம். அவரோடு கனியும் வந்திருந்தான். ஃபேஸ்புக்கில் தினமொரு அத்தியாயம் என்று எழுதிய மந்திரச்சந்திப்பை நூலாக்கிவிட்டார். அவர் அதனை நூலாக தொகுத்தபோதே படித்துவிட்டேன். நூலைக் கொடுத்தவர், அதற்கு பணம் கொடுத்தபோது வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரே வேண்டாம் என்ற போது கட்டாயப்படுத்தவேண்டாம் என நானும் விட்டுவிட்டேன். மார்வெல் யுனிவர்ஸ் போல அவர் இதுவரை எழுதிய நாவல்களிலுள்ள பாத்திரங்கள் மந்திரச்சந்திப்பு நாவலில் சந்தித்து உரையாடுகின்றன. இதுதான் இந்த நாவலின் முக்கியமான அம்சம். வாசிக்க நன்றாக

கிராமங்களை விட்டு வைக்காத நோய்த்தொற்று! - கடிதங்கள்

படம்
    வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டு! வடக்குப்புதுப்பாளையம் 19.4.2021 அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் அறையில் வெப்பக் கொடுமை என்றால் வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் இரும்புக்கூரை உள்ள அறையில் வேலை செய்கிறேன் . இது வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டப்பட்டது . வீட்டின் மற்ற அறைகள் சிறியவை . வேலை செய்வதற்கு காற்றோட்டமாக இல்லை . அடுத்த ஆண்டிற்கான வேலைகளை செய்து வருகிறோம் . இந்த ஆண்டில் வேலையை காப்பாற்றிக்கொண்டு முழு சம்பளம் வாங்குவது கடினமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது . ஜீரோ டு ஒன் என்ற தொழில்சார்ந்த நூல் ஒன்றை பிடிஎப் வடிவில் போனில் படித்தேன் . ஸ்டார்ட்அப் நிறுவனங்களை எப்படி தொடங்குவது , என்ன மாதிரியான அணுகுமுறை வெற்றியைக் கொடுக்கும் என பல்வேறு கருத்துகள் நூலில் இருந்தன . 180 பக்கங்கள்தான் . நூல் ஆங்கிலம் என்பதால் புரிந்துகொண்டு வாசிக்க காலதாமதமாகிவிட்டது . தொழில் நிறுவனங்களின் சூப்பர் ஐடியா , சொதப்பல் ஐடியா , தொழில் சார்ந்த மூடநம்பிக்கைகள் என நிறைய விஷயங்களை ஆசிரியர் பேச

அமெரிக்கா எனும் அசோகவனத்தில் அலைகழியும் ராமன்! - அமெரிக்க தேசி - அருண் நரசிம்மன்

படம்
              அமெரிக்க தேசி அருண் நரசிம்மன் தமிழினி திருச்சி ஶ்ரீரங்கத்தில் படித்த இயற்பியல் பட்டதாரி அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பு படிக்கச் சென்று அந்த கலாசாரத்தில் கலந்து என்ன கற்றுக்கொண்டார் , பெற்றுக்கொண்டார் என்பதுதான் கதை . தேசிகன் நரசிம்மச்சாரி என்ற கதைநாயகனின் பெயர்தான் , அமெரிக்கன் தேசி என்று மாறியிருக்கிறது . நூல் ஏறத்தாழ சேட்டன் பகத்தின் நாவல் போன்றதுதான் என்று மேலோட்டமாக தோன்றும் . ஆனால் வாசிக்கும்போது , அந்த நினைப்பே உங்களுக்குள் வராது . காரணம் , அருண் நரசிம்மன் அந்தளவு தமிழ் இலக்கிய விஷயங்களை உள்ளே நுட்பமாக வைத்திருக்கிறார் . தமிழ் பாசுரங்களை , திருக்குறள்களை சூழலுக்கு ஏற்ப நுணுக்கமாகப் பயன்படுத்தியிருப்பதால் நாவல் எழுநூறு பக்கத்திற்கு நீண்டாலும் பெரிய சோர்வு ஏற்படவில்லை . நிறைய இடங்களில் அவல நகைச்சுவை காட்சிகளை புன்னகையுடன் படிக்க முடிகிறது . எழுத்தாளரின் சொல்லாட்சி ஆச்சரியப்படுத்துகிறது . தேசிகன் என்ற வடகலை பிராமணர் , அமெரிக்காவில் தான் காணும் அனைத்