இடுகைகள்

போலி அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை!

படம்
      போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை! மக்களுக்கு வழங்கப்படும் கல்வியே, நாட்டின் மேம்பாடு, வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இதை ஐ நா அமைப்பும் அங்கீகரித்து ஏற்றுள்ளது. நவீன காலத்தில் தொடக்க கல்வி, தேசிய மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மாறியுள்ளது. இதற்கு எதிராக 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்திய கலாசார தன்மைக்கேற்றபடி கல்வி என்ற போர்வையில், தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கல்விமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கொள்கை, உண்மையான வரலாற்றை மாற்றி மாணவர்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறது. இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களில் இந்திய அறிவுத்திட்டம் என்பதை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. ஜோதிடம், ஜவுளித்துறை, நகரங்கள் திட்டமிடுதல், வேத கணிதம் என வெளிப்படையாக பொதுவாக பார்த்தால் மாணவர்களுக்கு நன்மை தருவதுபோல தோன்றும். ஆனால், பகுத்தாய்ந்து பார்த்தால் வலதுசாரி கருத்துகளை உள்ளே திணித்து குறிப்பிட்ட சில இனக்குழுவினருக்கு சாதகமான கல்வி மாறியிருப்பதை அடையாளம் காணலாம். இதை பிரசாரம் செய்ய இலக்கியங்கள், நூல்கள், போஸ...

பற்பசையைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
                அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி பற்பசைகளில் மூலிகை, உப்பு, கிராம்பு, கரி என பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எதை வாங்குவது? வேப்பிலை, புதினா, கிராம்பு ஆகிய சுவை கொண்ட பற்பசைகள் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். எனவே,அதற்காகவே அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றால் பற்களுக்கு பெரிய நன்மை இல்லை. அப்படி இருப்பதற்கான அறிவியல் ஆதாரங்களும் இல்லை. புதிதாக வரும் சில நிறுவனங்கள் பிரியாணி செய்யத் தேவைப்படும் மசாலாக்களை வைத்தே பற்பசை தயாரித்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு பின் சென்று ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார்கள். அவையெல்லாம் உண்மை கிடையாது. பற்பசையின் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். அவ்வளவுதான். ஒரே பற்பசை என சலிப்பு தந்தால், இப்படியான மூலிகை, உப்பு, கரி என டிரெண்டிங் கொண்ட பற்பசைகளை வாங்கி பயன்படுத்தலாம். மற்றபடி பற்பசையில் ஃப்ளூரைடு அவசியம். இந்த வேதிப்பொருள் பற்சிதைவிலிருந்து பற்களைக் காக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு பெருநிறுவனங்கள், சுதேசி நிறுவனங்கள் இரண்டுமே ஏராளமான பொருட்களை ...