இடுகைகள்

இறப்புச் சான்றிதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் இறப்புகளை கணக்கிடுவது முக்கியமா?

படம்
  கோவிட்டில் இறந்த மக்களின் உண்மையான எண்ணிக்கை பல்வேறு மாநிலங்கள் ஊடகங்களுக்கு அறிவிப்பதில்லை. காரணம், அப்படி கூறினால் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற பயம்தான்.  ஆனால் உண்மையில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரிந்தால்தான் நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்தும்படியான வசதிகளையும், கொள்கைகளையும் உருவாக்க முடியும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் இந்த எண்ணிக்கையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதெல்லாம் பெரும்பாலும் நகரங்களில் எளிதாக கடைபிடிக்க முடியும். ஒருவர் இறந்துவிட்டால் அதற்கான சான்றிதழை பெற்று அவரை தகனம் செய்கிறார்கள். இதனால் அவருடைய இறப்பு மருத்துவமனையில், அரசு அமைப்பிலும் என இரண்டு இடங்களில் முறையாக பதிவாகிறது. ஆனால் அரசு அமைப்புகளுக்கு எட்டாத தொலைதூர கிராமங்களில் இம்முறை செயல்படாது. இங்கு ஒருவர் கொரானாவில் இறந்தாலும் கூட அதைப்பற்றி அரசுக்கு தெரிவிக்காமல் உடலை தகனம் செய்துவிடுகிறார்கள்.  இதனைத் தவிர்க்க மத்திய அரசு வெர்பல் ஆட்டோஸ்பை எனும் முறையைக் கொண்டுவந்தது. மருத்துவர் இல்லாத சூழலில், குடும்பத்தினர், நண்பர்கள் கூறும் தகவல்களை வைத்து அவரின் இறப்பு முட