இடுகைகள்

உருளைக்கிழங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விஷம் கொண்ட தாவரங்கள்- விஷத்தை எப்படி பக்குவப்படுத்தி உண்பது?

படம்
  விஷம் கொண்ட காய்கறிகள் நாம் உண்ணும் நிறைய காய்கறிகள் விஷத்தன்மை கொண்டவைதான். அதாவது மனிதர்களின் செயல்பாடு இல்லாமலேயே இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விஷம் உண்டு. இவற்றை இன்றுவரை மனிதர்கள் விஷம் என்ன விட்டுவிடவிலை. அதை பதப்படுத்தி பக்குவப்படுத்தி மருந்துகள், உணவு, வாசனை திரவியங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப்பற்றி பார்ப்போம் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகள் விஷத்தன்மை கொண்ட கொட்டைகளை சாப்பிட்டு வந்தனர். இரண்டு கொட்டைகளே ஒரு விலங்கை கொல்ல போதும். இப்படி விஷம் கொண்ட தாவர விதைகளை சைகாட்ஸ் என்று பெயர். இதிலுள்ள விஷம் சைகாசின் என அழைக்கப்படுகிறது. குடலில் சென்று செரிமானம் ஆகும்போது விஷம் வெளிப்பட்டு குடல் செல்களை தாக்குகிறது. பிறகு கல்லீரலையும் பாதிக்கிறது. குடல் எரிச்சல், கல்லீரல் செல்கள் இறப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு இறப்பு நேர்கிறது. பழங்குடிகள் இதை அறிந்துதான் விஷம் வாய்ந்த விதைகளை நீரில் அலசி நிலத்தில் துளையிட்டு அதை ஒரு வாரம் அல்லது சில மாதங்கள் வைத்திருந்து எடுத்து உலர்த்தி பிறகு உண்கிறார்கள். இந்த செயல்முறையில் தாவரத

உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது? தெற்கு அமெரிக்காவில் முதல் பயிராக விளைவிக்கப்பட்டு ஏழாயிரம் ஆண்டுகளாகிறது. உருளைக்கிழங்கு பல்வேறு பட்டினி, பஞ்ச காலங்களில் முக்கியமான உணவுப்பொருளாக இருந்திருக்கிறது. அப்படி இல்லாத காலங்களில் தீனிப் பொருளாக சிப்ஸ், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்ற பெயரில் பரிமாறப்பட்டுள்ளது. இன்றும் சமோசாவில் உருளைக்கிழங்கை விட்டால் கதி மோட்சமில்லை. பெருமளவு விலை ஏறாத காய்கறி இது ஒன்றுதான். அதனால்தான் எப்போதும் ஓட்டல் சாம்பாரில் இதனை மிதக்க விடுகின்றனர். உருளைக்கிழங்கு புகழ்பெற்றதற்கு காரணம் அதிலுள்ள ஸ்டார்ச்தான். இதில் விட்டமின் சி, பி6, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. நார்ச்சத்து அதிகம். வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும். பொரித்தால் கொழுப்பு ஏறிவிடும். உருளைக்கிழங்கிலும் பின்னர் நமது உடலிலும்தான். கேக், ஐஸ்க்ரீம், சாலட், பிஸ்கெட் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு நிலைய வித்வான் போல எப்போதும் இருக்கும். காரணம் அனைத்து காய்கறிகளை விட காசு குறைவு. மாவுச்சத்து அதிகம். 1995ஆம்ஆண்டு விண்வெளியிலும் உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட

சில உருளைக்கிழங்கு வகைகள் மட்டும் சுவையாக இருப்பது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி சில குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்குகள் மட்டும் பிசைய சாப்பிட நன்றாக இருக்கிறதே ஏன்? உதயம் பருப்பு வகைகள் விளம்பரம் போல இருக்கிறது நீங்கள் கேட்பது. உபரி அதிகம் வரவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள் போல. உருளைக்கிழங்குகளை வேக வைத்து பிசைந்தால் நிறைய வருவது அதிலுள்ள ஸ்டார்ச் கையில்தான் உள்ளது. இதற்கென குறிப்பிட்ட வகைகள் உள்ளன. இவற்றை விதைத்து அறுவடை செய்து வேக வைத்து தாளித்து சாப்பிட வேண்டியதுதான். கிங் எட்வர்டு, மாரிஸ் பைபர் எனும் வகைகள் இதில் உங்களுக்கு உதவும். சார்லட் மற்றும் அன்யா ஆகிய வகைகள் குறைவான ஸ்டார்ச் கொண்டவை. இவற்றைப் பயன்படுத்துவதை விட மேற்சொன்ன வகைகள் சமைக்கவும் சாப்பிடவும் சிறப்பாக இருக்கும். பெப்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் சிப்ஸ் வகைகள் அவர்களின் தனித்துவமான உருளைக்கிழங்குகள் மூலம் உருவாகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றபடி உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் அவர்களின் உருளைக்கிழங்குகளை சீவினால் மிக நேர்த்தியாக வரும். நன்றி - பிபிசி

உருளைக்கிழங்கே உணவு- பொருளாதார தாக்குதலில் ஈரான்!

படம்
pixabay ஈரானில் உணவு பரிதாபம்! வளமான, போர்களைச் சந்திக்காத நாடுகளில் உருளைக்கிழங்கு என்பதற்கு பொருள், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு பொரியல் மட்டுமே. ஆனால் வறுமை, சர்வாதிகாரம், பொருளாதாரத் தடை ஆகியவற்றைச் சந்திக்கும் நாடுகளுக்கு உருளைக்கிழங்குதான் உணவாதாரமே. எனவேதான் உடல்பருமனுக்கு உருளைக்கிழங்கு பெருமளவு இகழப்பட்டாலும், அதன் உற்பத்தியை குறைப்பதில்லை. காரணம், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஈரான் தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக வெளிநாடுகளில் வாங்கி வந்த சோளம், அரிசி, பார்லி ஆகியவை அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது அங்கு மக்களுக்கு உணவாதாரத்திற்கு உருளைக்கிழங்குதான் ஒரே வழி. 2009 ஆம் ஆண்டு பிரதமரான ஈரான் அதிபர் மஹ்மூத் ஆமடினேஜாட் ஆட்சியில் மக்கள் கடும் பிரச்னைகளைச் சந்தித்தனர். இதன் விளைவாக, அவர்களின் கடந்த காலத்தை நினைவூட்டும்படி, நமக்கு உருளைக்கிழங்கு வேண்டாம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சி தலைவர்கள் அலறினர். ஏறத்தாழ உருளைக்கிழங்கு என்பதே அங்கு மறைந்து வந்த நேரத்தில் மீண்டும் அதனை மக்கள் நாட வேண்டிய சூழ