சில உருளைக்கிழங்கு வகைகள் மட்டும் சுவையாக இருப்பது எப்படி?
மிஸ்டர் ரோனி
சில குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்குகள் மட்டும் பிசைய சாப்பிட நன்றாக இருக்கிறதே ஏன்?
உதயம் பருப்பு வகைகள் விளம்பரம் போல இருக்கிறது நீங்கள் கேட்பது. உபரி அதிகம் வரவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள் போல. உருளைக்கிழங்குகளை வேக வைத்து பிசைந்தால் நிறைய வருவது அதிலுள்ள ஸ்டார்ச் கையில்தான் உள்ளது.
இதற்கென குறிப்பிட்ட வகைகள் உள்ளன. இவற்றை விதைத்து அறுவடை செய்து வேக வைத்து தாளித்து சாப்பிட வேண்டியதுதான். கிங் எட்வர்டு, மாரிஸ் பைபர் எனும் வகைகள் இதில் உங்களுக்கு உதவும்.
சார்லட் மற்றும் அன்யா ஆகிய வகைகள் குறைவான ஸ்டார்ச் கொண்டவை. இவற்றைப் பயன்படுத்துவதை விட மேற்சொன்ன வகைகள் சமைக்கவும் சாப்பிடவும் சிறப்பாக இருக்கும்.
பெப்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் சிப்ஸ் வகைகள் அவர்களின் தனித்துவமான உருளைக்கிழங்குகள் மூலம் உருவாகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றபடி உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் அவர்களின் உருளைக்கிழங்குகளை சீவினால் மிக நேர்த்தியாக வரும்.
நன்றி - பிபிசி