இடுகைகள்

அரசுத்தேர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரயில் நிலையத்தில் ஜோதிட நிரூபணம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஜோதிட நிரூபணம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கார்ட்டூன் கதிரவன் போன் செய்தபோது விசாரித்தார் . நலமோடு இருப்பதாக பதில் கூறினேன் . நாகப்பட்டினத்தில் இருந்து இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார் . அவர் மனைவி அகிலா , அரசுத்தேர்வுக்கு படித்து தேர்வுகளை எழுதி வருவதாக கூறினார் . ஒருமுறை தேர்வு எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார் . திருவான்மியூர் ரயில் நிலையம் என்று சொன்னார் . அங்கு , ஆதவன் நாளிதழில் முன்னர் பணியாற்றிய குமார் என்பவரை சந்தித்திருக்கிறார் . முழுநேர ஜோதிடரும் , பகுதிநேர ஃப்ரூப் ரீடருமான குமார் , ரயில் நிலையத்திலேயே அகிலாவுக்கு ஜோதிடம் பார்த்து வேலை பற்றி கூறுவதாக சொல்லியிருக்கிறார் . கதிரவனுக்கு மனதில் சங்கடமாகியிருக்கிறது . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கதிரவன் குமாரை சந்தித்திருக்கிறார் . ஆனால் அவர் அப்போதும் தனது ஜோதிட திறனை நிரூபிக்க வாய்பைத் தேடியிருக்கிறார் . அகிலா தடாலடியாக பேசக்கூடியவர் . கணவரின் நண்பர் என்பதால் நிதானம் கூட்டி பொறுத்திருக்கிறார் . நாளிதழ் பணிக்கான கட்டுரைகளைத் தேடி படித்து வர

அரசுத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுப்பாலினத்தவர்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை அறிவு இருந்தாலும் கூட அவர் என்ன பாலினம், என்ன சாதி என்பதைப் பொறுத்தே அவர் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது. இந்த தடைகளை தாண்டி சாதிக்க உங்களுக்கு முதுகெலும்பு எஃகால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் கேலி, கிண்டல், வசைகளை கடந்து வெல்ல முடியும். குறைந்தபட்சம் தற்கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியும். சமூக அழுத்தம் அந்தளவு மோசமாக மாறியிருக்கிறது. அதிலும் மாற்றுப்பாலினத்தவர் என்றால் நிலைமையை சொல்லவே முடியாது. அந்தளவு சிக்கலாக இருக்கும். அமிர்தாவுக்கு வயது 38. தற்போது திருவண்ணாமலையில் தட்டச்சராக இருக்கிறார். தனியார் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் வேலை பார்த்தவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். அரசு தேர்வெழுதி இப்போது தட்டச்சராக தேர்வு பெற்று வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பம் தினக்கூலிதான். குடும்பத்தில் மொத்தம் ஏழுபேர். அத்தனை பேரும் வறுமையால் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டார்கள். இதில் அமிர்தா மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பு படித்தவர். இதற்கும் அவர் வேலை செய்துதான் கல்வி கட்டணங்களை கட்டியிருக்கிறார். முக்கியமான