இடுகைகள்

நேர்காணல் தமிழில் லாய்ட்டர் லூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா இறுதிப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
படங்களைத் தயாரிக்கும் முன்னணி பெரும் நிறுவனங்கள் திரையரங்கு குழுமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாங்கள் தயாரிக்கும் படங்களை மட்டும் திரையிடக்கூறுகிறார்கள் என்கிறீர்களா?        திரையரங்குகளில் எனது படம் திரையிடப்பட நான் ஒரு விநியோகஸ்தரைக் கண்டுபிடித்து அவரிடம் படத்தை ஒப்படைக்கவேண்டும். ஆனால் எனது படம் அவர்களது தயாரிப்பான படங்களோடு போட்டியிடுவதாக அவர்கள் நினைத்தால் அதனை அலமாரியில் வைத்து விட்டு மறந்துவிடுவார்கள். மொத்தமாக அனைத்து படங்களுமாக சேர்த்து கிரீசில் எத்தனை படங்கள் உருவாக்கப்படுகின்றன?        ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுபவை மொத்தம் 120 படங்கள் தோராயமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஏதேன்ஸில் வெளியிடப்படாது. அவை முறையான முதல் காட்சி என்பதைத் தவிர்த்து பொதுவான வெளியிடலாக வெளியிடப்படும். கிரீஸ் நாட்டில் சில விதிகள் உள்ளன. மக்கள் படங்களின் கீழ் வரும் சப்டைட்டில்களை வாசிக்க மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கிரீசில் குடும்பத்தோடு படம் பார்க்கச்செல்பவர்கள் அதிகம் என்பதால் எந்தப்படம் வயது வந்தவர்களுக்கானது என்று சா

நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
குடியுரிமை தரப்படும் முன் எப்படி அயல்நாடுகளில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?        அது எளிதானதாக இல்லைதான். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவர்கள் அங்கே வாழ்ந்தார்கள். கிரீக் மக்கள் பெரும் திரளாக அயல்நாடு சென்று வாழவேண்டிய தேவை இருந்தது. நூற்றாண்டு பிறந்த காலத்தில் பெரும்பாலோர் அமெரிக்கா சென்று குடியேறினார். அமெரிக்காவில் ஒன்று அல்லது ஒன்றரை கோடி கிரீக் மக்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். ஜெர்மனியில் 3 லட்சம் மக்கள் முன்னமே குடியேறி வாழ்ந்து வருகின்றனர் . அவர்கள் அனைத்து இடங்களுக்கும் பரவி வாழ்ந்து உழைத்து ஈட்டும் பணத்தை தமது தாய்நாட்டிற்கு அளித்து பொருளாதார பங்களிப்பையும் ஆற்றுகிறார்கள். அமெரிக்கர்கள் இன்று கிரீஸ் நாட்டிற்கு வந்து அதனை தொழில்மயமாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து செய்ய முனைவார்கள். கிரீஸ் இன்று பல மாநிலங்களைக் கொண்டதாக மாறியுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்னே இரு அமெரிக்கர்கள் 16 வயதான கிரீக் பெண்ணை வன்புணர்ச்சி செய்துவிட்டனர். அவ்வழக்கு விசாரணையில் அவர்கள் அச்சமயத்தில் கிரீஸ் நாட்டில் இல்லை, ஆனால் அமெ

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்: நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா

படம்
நிலத்தை கைவிட்டுச் செல்பவர்களுக்கான இரங்கற்பா: மறுகட்டமைப்பு ப்ளோரியன் ஹோப் – 1971 படம் பற்றி தங்களது கருத்துக்கள் மற்றும் முன்னுரையோடு தொடங்குவோம்.       கிரீக் நாளிதழ்களில் பெண்கள் தம் கணவர்களை கொலை செய்வது குறித்த செய்திகளை நிறையவே நான் கவனித்துவந்திருக்கிறேன் என்றாலும் குறிப்பிட்ட ஒரு வழக்கு என்னை ஈர்த்து சிந்திக்கவைத்தது. கிரீக் நாட்டின் ஏழ்மையான மிகவும் பிற்படுத்தப்பட்ட வளர்ச்சியடையாத பகுதியாக எபிரஸில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தன.  அக்கிராமத்திற்கு தொடர்ச்சியாக சென்று அண்மையில் நடந்த குற்றம் ஒன்றினை பத்திரிகையாளரின் புலனாய்வு பார்வையில் பதிவு செய்ய முடிவெடுத்தேன். நான் குற்றம் நடந்த இடத்தில் வசித்தவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களது குழந்தைகள், விசாரணைக்கு முன்னதாக பல விவரங்களைத் தெரிவித்த பிரதிவாதியின் வழக்குரைஞர் ஆகியோரிடம் உரையாடி பல்வேறு விவரங்களைச் சேகரித்தேன். இவைதான் எனது கதைக்கு அடிப்படையாக அமைந்தது. எபிரியன் கிராமத்தின் வாழ்க்கையை அக்குற்றச்சம்பவமான கொலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதற்கு மன்னிப்ப

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
முந்தைய தங்களது படங்களைப் போலில்லாது இதில் நீங்கள் ஏராளமான புராணங்கள் தொடர்பான விஷயங்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள். இங்கே இதுபோன்ற ஒன்றை கூறலாம் என்று நினைக்கிறேன் – புராணத்தின் சங்கேதக்குறிப்பு போல முதிய மனிதர் கிராமத்தில் சந்திக்கும் தனது நாயை அர்கோஸ் என்று அழைப்பதைக் கூறலாம். யுலிசஸ்- பெனலோப்- டெலிமாச்சஸ் எனும் இந்த முக்கோண அமைப்பானது பயணம் முடிவைதக் குறிக்கிறது. ட்ராய் போரினை ஒத்தது போல கிரீஸில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சிக்கலில் இருப்பது, யுலிசஸ் திரும்பி தன் நாடான அங்கு வருவது தெளிவான முடிவைக்காட்டுகிறது. எனது முந்தைய படங்களான 36 நாட்கள், மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் ஆகிய படங்களில் போர் மட்டுமே முக்கியமானதாக கவனப்படுத்தப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக பின் எதுவும் நீளாது அப்படியே நிறைவுற்றிருக்கும். கதையின் பாத்திரங்கள் கொண்டுள்ள முந்தைய கருத்து பேதங்கள் புரட்சி நாட்டில் ஏற்பட்டாலும் நாடு அதனை மறுக்கும்போது அவனுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. முதிய யுலிசஸ் எந்த சமரசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்; அதனால் அவர் எதற்கும் தகுதி பெறாமல் போகிறார்; அவருக்கான பாத்திரம் அங்கு