இடுகைகள்

சத்திய சோதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரக நெருப்புப் பொறி! - 131 ஆண்டுகள்

படம்
          131 ஆண்டுகள் - சத்தியாகிரக நெருப்பு பொறி! தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், வரலாற்று நிஜம் அப்படித்தான் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையம். அங்குள்ள ரயிலின் முதல் வகுப்பு வெள்ளையர்களுக்கானது. முறையாக முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அமர்ந்த இளம் வழக்குரைஞர், வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டார். அவர் பெயரை தனியாக நான் கூறவேண்டியதில்லை. அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம் தேசத்தந்தையான மகாத்மா காந்திதான். அந்த சம்பவமே காந்தியை சட்டமறுப்பு அதாவது சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுக்க வைத்தது. அப்போராட்டம் தொடங்கி இந்த ஆண்டோடு 131 ஆண்டுகள் ஆகிறது. 1893ஆம் ஆண்டு, ஜூன் ஏழாம் தேதி மகாத்மா காந்தி ரயிலில் டர்பனிலிருந்து பிரிடோரியா சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான், ரயில் நிலைய அதிகாரி அவரிடம் தகராறு செய்தார். காந்தி, முதல் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்புக்கு செல்லவேண்டும் என மிரட்டினார். காந்தி மறுக்கவே காவலர் ஒருவரின் துணையுடன் அவரை வெ