இடுகைகள்

பிடிஎஸ்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலியை பேருந்து விபத்தில் பறிகொடுத்துவிட்டு, வினோதமான நபராக மாறும் காதலன்! - ஸ்டில் 17- தென்கொரிய தொடர்

படம்
  ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 தென்கொரிய டிவி தொடர் யூட்யூப் – எஸ்பிஎஸ் வேர்ல்ட் கொரியாவின் சியோல் நகரம். இங்கு, பதினேழு வயதான காங் வூ ஜின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது, இசையை அனுபவித்து வாசிக்கும் பள்ளிச்சிறுமி ஒருத்தியை பார்க்கிறான். அவள் வயலின் வாசிப்பவள். பள்ளியில் போட்டியில் வாசித்து வென்று ஜெர்மனிக்கு பயிற்சிக்கு போகும் சூழலில் இருக்கிறாள். காங்கிற்கு, அவள் பெயர் தெரியாது. ஒருநாள் சைக்கிளில் வரும்போது, பள்ளிச் சீருடையுடன் சிறுமி ஒருத்தி நடைமேடையில் நிற்கிறாள்.   கைவிரல்களை முயல்போலாக்கி நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள். அப்போதுதான் தான் விரும்பும் சிறுமியின் பெயரை நோ சுமி என அறிகிறான். அந்த போஸை அப்படியே படமாக வரையும் காங், அவளிடம் கொடுத்து நட்பாக நினைக்கிறான். ஆனால், திடீரென நடக்கும் பேருந்து விபத்தில் நோ சுமி என்ற பெயர் கொண்ட சிறுமி இறந்துபோகிறாள். இதனால், காங் மனம் உடைந்து போகிறான்.   விபத்தான பேருந்தில் அன்றைக்கு பயணித்த காங், தான் விரும்பிய சிறுமிக்கு கலை அரங்கம் செல்ல தவறான வழியை சொல்லிவிடுகிறான். அந்த சிறுமியும் அதேபோல அவன் சொன்ன

குடிநோயைக் கட்டுப்படுத்த எக்ஸ்டஸி உதவுமா?

படம்
                ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உலகளவில் அதிகரித்து வருகிறது . மது அருந்துவது என்பது பெரும்பாலான மேற்கு நாடுகளில் கலாசாரமாகவே உள்ளது . ஆனால் தொடர்ச்சியாக குடித்து குடிநோய்க்கு உள்ளாவதை எப்படி தடுப்பது என்பது மருத்துவ்துறையில் முக்கியமான பிரச்னையாக உள்ளது . இதற்கு எம்டிஎம்ஏ வேதிப்பொருளைப் பயன்படுத்தி சைக்கோதெரபி கொடுக்க முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர் . இங்கிலாந்தில் மட்டும் மது அருந்துவதால் ஆண்டிற்கு எட்டாயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர் . நாட்டில் எழுபது சதவீத வன்முறையும் உருவாகிறது . இப்படி மது அருந்துபவர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 3.5 பில்லியன்களாக உள்ளது . மது அருந்துவதை அடிமைத்தனமாக மாறியது என்ற உண்மை தெரியாமல் இங்கிலாந்திலுள்ள ஆண்கள் 9 சதவீதமும் , பெண்கள் 3 சதவீதமும் மதுவில் மிதக்கின்றனர் . இவர்களது வாழ்க்கை மதுவைச் சார்ந்தே அமைந்துள்ளது . 3,4 மெத்திலின்டையாக்சி மெத்தாம்பீட்டமைன் அல்லது எக்ஸ்டசி என பொதுவாக அழைக்கப்படும் எம்டிஎம்ஏ வேதிப்பொருள் பயன்படுகிறது . இதனை மருத்துவத்துறையில் பிடிஎஸ்டி பிரச்னைக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள் . மதுவில் ப