இடுகைகள்

உதவித்தொகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பின பாகுபாட்டால் உதவித்தொகையைப் பெற முடியாமல் தவித்த நீச்சல்வீரர்

படம்
  அட்ரியானா பார்போஸா adriana barbosa பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோவில் வாழும் பெண்மணி. ஒருமுறை வீட்டிற்கு வாடகை கட்ட தடுமாறும் பொருளாதார சூழ்நிலை. அவர்கள் மட்டுமல்ல, ஆப்பிரிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வறுமையான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாட்டில், கருப்பினத்தவரை விட வெள்ளையர்கள் 74 சதவீத அதிக சம்பளத்தை வாங்கிக்கொண்டிருந்தனர். ஆப்பிரிக்க - பிரேசிலியர்கள் வெள்ளையர்களைப் போல கல்வித்தகுதியைக் கொண்டிருந்தாலும் கூட சம்பள விஷயத்தில் 70 சதவீதம்தான் பெற்றுக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் அறிந்த அட்ரியானா, இருபது வயதில் கருப்பின மக்களுக்காக ஃபெய்ரா பிரேட்டா விழாவை உருவாக்கினார். இந்த விழாவில் இசை, நாடகம், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளோடு சுயதொழில் முனைவோர் தங்களது பொருட்களையும் விற்கலாம்.  பல்வேறு தனியார் நிறுவன நன்கொடை மூலம் கருப்பினத்தவர் தொழில் செய்ய 2.2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இப்படி கருப்பின தொழிலதிபர்களுக்கு உதவும் பாதை எளிமையாக இல்லை. ஒருமுறை விழாவில் சேகரமான டிக்கெட் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில வெள்ளையர்கள் தங்கள் தெருவில் விழாவை நடத்தக்கூடாத

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய தொழிலதிபர்!

படம்
 ரமோன் ஆங்க் அதிபர், இயக்குநர், மிகுல் கார்ப் வயது 69 பிலிப்பைன்ஸ்  Ramon ang miguel corp சுயம்பாக முளைத்தெழுந்த தொழிலதிபர். மணிலாவில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டுவதற்காக ஒன்பது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். மதுபானம், உணவு, வங்கி, ஆற்றல், மின்சாரம், சாலை பராமரிப்பு நிறுவனங்களை ரமோன் நடத்தி வருகிறார். நாட்டின் வலிமையை, வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களின் கல்வி, திறன் அதிகரிக்கவேண்டும். வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்ல வயது வந்தோருக்கும் கூட நல்ல பணி கிடைக்கவேண்டும். அல்லது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதற்கான திறன்களை வழங்க முயல்கிறோம் என்று தான் வளர்ந்த டோன்டோ மாவட்டத்தில் பள்ளி வளாகம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசினார்.  ரமோன், சான் மிகுல் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வழியாக பள்ளிகளைக் கட்டுவது, கோவிட் 19 நிவாரண நிதி, நகர ஆறுகளை தூய்மைப்படுத்துவது, கல்விக்கான உதவித்தொகை, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. ஆர்எஸ்ஏ பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிற்கும் கல்வி சார்ந்து நிதி நல்கையை கொடுக்கிறது.  -ஜேபி லீ கா ஷிங் மூத்

சாதனை படைக்கும் வள்ளல் பணக்காரர்கள் ! வியட்நாம், ஜப்பான், ஹாங்காங் நாட்டு வள்ளல்கள்

படம்
          உலகம் புகழும் வள்ளல் பணக்காரர்கள் ! பாம் நாட் உவாங் வின் குழுமம் வியட்நாம் பாம் , 2006 ஆம் ஆண்டு கைண்ட் ஹார்ட் பௌண்டேஷனை உருவாக்கினர் . இந்த நிறுவனத்திற்கென 77 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளார் . இதன் மூலம் சிகிச்சை தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கும் மாணவர்களின் உதவித்தொகைக்கும் நிதியை வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் வீடுகளைக் கட்டுவது , மருத்துவ மையங்களை அமைப்பது . நூலகங்களை உருவாக்குவது என வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கென பல்வேறு செயல்பாடுகளை பாம் செய்துள்ளார் . இயற்கை பேரிடர்களுக்கு உதவுவதோடு , வின் குழுமம் கோவிட் -19 நிவாரணப்பணிகளுக்கும் 55 மில்லியன் டாலர்கள் அளவில் பல்வேறு கருவிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் . வின் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள பாம் , வாகனங்கள் தயாரிப்பு , ரியல் எஸ்டேட் , தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கிறார் . ததாசி யானாய் ஃபாஸ்ட் ரீடெய்லிங் ஜப்பான் இவரது நிறுவனம் யுனிக்யூ என்ற ஜவுளி பிராண்டை நடத்தி வருகிறது . இதில் கிடைக்கும் வருமானத்தில் 102 மில்லியன் டாலர்களை நாட்டின் பல்க்கலை

கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள்!

படம்
              கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள் ! அஹ்மத்நகரைச் சேர்ந்த கமலாகர் சேட்டே , எம் . காம் பட்டதாரி . சமூக நலத்துறை மூலம் டாக்டர் அம்பேத்கர் ஸ்வாதர் யோஜனா திட்டத்தின் கீழ் இவருக்கு 51 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது . இவர் ஏற்கெனவே இறுதியாண்டுத் தேர்வை எழுதிவிட்டார் . சமூக நலத்துறை எனக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகையை கொரோனா காரணமாக இல்லை என்று கூறிவிட்டது . ஆண்டுகள் கடந்தாலும் உதவித்தொகை வரும் என காத்திருந்து சலித்துவிட்டார் கமலாகர் . ஆனால் இன்றுவரை உதவித்தொகை கிடைப்பதாக தெரியவில்லை . ஆண்டு வருமானமே 50 ஆயிரம் ரூபாய் வரும் கமலாகரின் பெற்றோர் எப்படி இவரின் கல்விச்செல்வுக்கு பணம் அனுப்ப முடியும் ? அரசு கல்வி உதவித்தொகையை தருவதாக சொல்லி கை கழுவியதால் பெற்றோரிடம் காசுக்கு கை ஏ்ந்தி நிற்கும் நிலை . மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை தாமதாவது தொடர்கதையாகிவிட்ட நிகழ்வு . அண்மையில் லேடி ஶ்ரீராம் பெண்கள் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ரெட்டி கல்விக்கட்டணத்தை கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிக்ழச்சிநாளிதழில் வெளியானது . இவர் இ

உலகம் போற்றும் வள்ளல்கள்!

படம்
பில்கேட்ஸ், வாரன் பஃபட் மட்டுமல்ல தன்னளவில் உலகில் பல்வேறு விஷயங்களுக்கு தாங்கள் சம்பாதித்த பணத்தைக் கொடுக்கும் பணக்கார ர்கள், தொழிலதிபர்கள் உலகம் முழுக்க உண்டு. அவர்களைப் பற்றி ஃபோர்ப்ஸ் இதழ் அட்டவணைப்படுத்தியுள்ளது. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம். அசீம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத் தலைவர் 7.6 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் தலைவர். அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் மூலம் கல்வி தொடர்பான பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பல்வேறு சமூகத்திற்கு அவசியமான பணிகளைச் செய்து வருகிறது. கடந்த ஜூலையில் விப்ரோ நிறுவன தலைவர் பணியிலிருந்து விலகினார். காந்தி மூலம் ஊக்கம் பெற்ற இவர், தன் வாழ்நாளில் 21 பில்லியன் டாலர்களை சமூகத்திற்காக அளித்துள்ளார். தியோடர் ராச்மட் - திரிபுத்ரா குழுமம் இந்தோனேசியா விவசாயம் சார்ந்த, சுரங்கம் போன்ற தொழில்களை ஏ அண்ட் ஏ ராச்மட் என்ற நிறுவனம் மூலம் செய்து வருகிறார். கல்வி, ஆதரவற்றோருக்கான உதவிகளை சர்வீஸ் பவுண்டேஷன் மூலம் செய்து வருகிறார். இந்த வகையில் 5 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார்.  1999ஆம் ஆண்டு மாணவர்களுக்கு