உலகம் போற்றும் வள்ளல்கள்!
பில்கேட்ஸ், வாரன் பஃபட் மட்டுமல்ல தன்னளவில் உலகில் பல்வேறு விஷயங்களுக்கு தாங்கள் சம்பாதித்த பணத்தைக் கொடுக்கும் பணக்கார ர்கள், தொழிலதிபர்கள் உலகம் முழுக்க உண்டு. அவர்களைப் பற்றி ஃபோர்ப்ஸ் இதழ் அட்டவணைப்படுத்தியுள்ளது. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம்.
அசீம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத் தலைவர்
7.6 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் தலைவர். அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் மூலம் கல்வி தொடர்பான பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பல்வேறு சமூகத்திற்கு அவசியமான பணிகளைச் செய்து வருகிறது. கடந்த ஜூலையில் விப்ரோ நிறுவன தலைவர் பணியிலிருந்து விலகினார். காந்தி மூலம் ஊக்கம் பெற்ற இவர், தன் வாழ்நாளில் 21 பில்லியன் டாலர்களை சமூகத்திற்காக அளித்துள்ளார்.
தியோடர் ராச்மட் - திரிபுத்ரா குழுமம்
இந்தோனேசியா
விவசாயம் சார்ந்த, சுரங்கம் போன்ற தொழில்களை ஏ அண்ட் ஏ ராச்மட் என்ற நிறுவனம் மூலம் செய்து வருகிறார். கல்வி, ஆதரவற்றோருக்கான உதவிகளை சர்வீஸ் பவுண்டேஷன் மூலம் செய்து வருகிறார். இந்த வகையில் 5 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார். 1999ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கத் தொடங்கினார். இன்றுவரை 21 ஆயிரம் மாணவர்கள் ராச்மட்டின் உதவியைப் பெற்றுள்ளனர். இம்முறையில் 12.5 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி தொடர்பான பயிற்சிகளை ராச்மட் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. மேலும் கிராமங்களில் இரண்டு டாலர்களுக்கும் குறைவான கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதற்கான மருத்துவமனைகளை அமைத்து வருகின்றார் ராச்மட்.
ஜெஃப்ரி சியா
சன்வே நிறுவனம்
2018ஆம் ஆண்டு ஜெஃப்ரி கல்வி தொடர்பான உதவித்தொகைகளுக்காக 39 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி மேம்பாட்டிற்காக 6 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார். ஆசிய பசிபிக் பகுதியில் பதினொரு வகை தொழில்களில் சன்வே நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தனக்கு சொந்தமான 238 மில்லியன் டாலர் பங்குகளை ஜெஃப்ரி சியா பவுண்டேஷனுக்கு அளித்துள்ளார். இந்த அமைப்பு கல்வி தொடர்பான பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
ஜூடித் நீல்சன்,
நிறுவனம், ஜேஎன் புராஜெக்ட்ஸ்.
ஆஸ்திரேலியா
சிட்னியில் உள்ள நீல்சன் ஜர்னலிசம் நிறுவனம் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் நூறு மில்லியன் டாலர்களை கல்வி, சுதந்திரமான பத்திரிக்கை செய்தி ஆகியவற்றுக்காக செலவழித்து வருகிறார். இதில் பெருமளவு நிதியை சிறப்பாக செயல்படும் ஊடக நிறுவனங்களுக்கு நீல்சன் நிறுவனம் அளிக்கிறது. நீல்சன் சீனாவின் பாரம்பரிய ஓவியங்களை பெருமளவு சேகரித்து வைத்துள்ள நபர்களில் ஒருவர்.
கியம் - நுங்
லாங் தன் கோல்ஃப் முதலீட்டு நிறுவனம்
வியட்நாம்
தம்பதிகள் இருவரும் வியட்நாமில் நடைபெறும் பல்வேறு இயற்கைப் பேரழிவுகள், ராணுவ வீர ர்களுக்கான நிதியுதவி ஆகியவற்றைச் செய்து வருகின்றனர். இருவரும் ராணுவ வீர ர்களுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் உதவியுள்ளனர். ஜப்பான், கம்போடியா ஆகிய நாடுகளுக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கல்விக்காக மட்டும் 9 லட்சம் டாலர்களை நிதியுதவியாக அளித்து வியக்க வைத்துள்ளனர்.
நன்றி - ஃபோர்ப்ஸ்