நட்சத்திரமாக என்னை நினைக்கவில்லை. நான் நடிகன்தான்! - ராஜ்குமார் ராவ்!
நேர்காணல்
ராஜ்குமார் ராவ், இந்தி நடிகர்
உங்களது மனதில் இப்போது என்ன உணர்வு உள்ளது?
மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் பிளான் பி ஏதும் கிடையாது. நடிக்கவேண்டும் என நினைக்கிறேன். இதனை என் வாழ்நாள் முழுக்க செய்ய ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான்.
இயக்குநர் ஹன்சல் மேத்தாவுடன் அதிக படங்களை செய்கிறீர்களே?
அவருடன் முதல் படம் பணியாற்றியபோது 2013ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இப்போது மீண்டும் அவரோடு இணைந்து ஐந்தாவது படம் செய்கிறேன். வேலை என்பதைத் தாண்டி அவர் என் குடும்ப நண்பர் போல ஆகிவிட்டார். காரணம், நாங்கள் சினிமாவின் மீது வைத்துள்ள ஆர்வம், ஆசைதான். நாங்கள் இருவரும் சொல்ல நினைக்கும் கதைகளை விஷயங்களை மக்களுக்குச் சொல்ல ஒன்றாக இணைகிறோம்.
நட்சத்திர அந்தஸ்து எப்படி இருக்கிறது?
அப்படி ஒன்று எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் நடிக்க விரும்பி இங்கு வந்தேன். நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னை நம்பி அளிக்கும் கதாபாத்திரங்களுக்கு நேர்மையாக இருக்கவேண்டும். அவற்றை மக்கள் ரசிக்கவேண்டும். இறுதியாக நான் சொல்ல விரும்புவது நான் நடிகன் மாத்திரமே.
இன்று படத்தின் கதையை முக்கியமாக பார்க்கிறார்கள். சினிமா எப்படி மாறியிருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?
இன்றும் கதை சார்ந்த படங்கள் நன்றாக ஓடுகின்றன. மற்றொரு பக்கம் மசாலா கதைகளும் வெல்கின்றன. மக்கள் தங்களை கதையில் இணைத்துக்கொண்டு பொருத்திக்கொள்ள வேண்டும். கதை சார்ந்த எதிர்பார்ப்புகளை மக்கள் உருவாக்குவது நல்லதுதான். அவர்களோடு புதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள். நடிகர்கள் இணைந்து வளருவதற்கான வாய்ப்பு உள்ளது.
நன்றி - ஃபிலிம்பேர்