இலங்கையின் வளர்ச்சிக்காக மகிந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!



‘People see Rajapaksas as solution to economic woes ...



இலங்கையில் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தேர்வாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வென்று சிங்கள இனவாத த்திற்கு உறுதுணையாக நின்றவர் இவர். இவரின் வெற்றி பற்றி இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர்  அசங்கா அபேயாகூனசேகராவிடம் கேட்டோம்.

இலங்கையில் மகிந்தா அதிபராகியுள்ளார். இந்நிலையில் டெல்லி - கொழும்பு உறவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

மகிந்தா, டெல்லியுடன் சிறப்பான உறவைப் பேணுவதாக முன்னமே கூறிவிட்டார். அதிபரான நிலையில் இதில் சில மாறுபாடுகள் நடக்கலாம். மகிந்தா முன்னமே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது. மொத்தமாக இந்தியா - இலங்கை உறவுகள் சிறப்பாகவும் உறுதியாகவும் இருக்கும் என கூறலாம்.

மகிந்தா வெற்றி பெற்றதை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்?

மக்கள் அவரை வரவேற்கிறார்கள். காரணம் நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருக்கிறது.அதனை சரிசெய்ய மகிந்தாவினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் தான் செய்யப்போகும் செயல்களைப் பற்றி முன்னமே கூறிவிட்டார். இப்போது அவர் எப்படி அதனைச் செய்கிறார் என்பது மட்டுமே முக்கியமானது. அதைத்தான் மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கோத்தபய ராஜபக்சே வெல்ல முக்கியக் காரணமாக இருந்தது என்ன?

 இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி 2.7 சதவீதமாக குறைந்துவிட்டது. இதற்கு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சிதான் காரணம் என கோத்தபய ராஜபக்சே பிரசாரம் செய்து வென்றிருக்கிறார். உள்நாட்டு உற்பத்தி வீழ்ந்ததால் மக்களின் தினசரி வாழ்க்கை கஷ்டமாக மாறியது. இலங்கையில் நடந்த கிறிஸ்துவர்களின் மீதான தாக்குதலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாறியது. இதன் காரணமாக சஜித் பிரேமதாசாவுக்கு இருந்த ஆதரவு வாக்குகள் குறைந்தன. இதனால் மகிந்தா எளிதாக வென்றார்.

தமிழர்கள் சிங்களவர்கள் வாக்குகளில் பிரிவினை உள்ளதாக கூறப்படுகிறதே?

அது உண்மைதான். 2015ஆம் ஆண்டு தமிழர்களும், முஸ்லீம்களும் மைத்திரி பாலஸ்ரீசேனாவுக்கு தங்களின் பாதுகாப்பு கருதி வாக்களித்தனர். அப்போது கூட அவர் சிங்களவர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை மறுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் தாம் இழந்த சிங்களவர்களின் வாக்குகளைப் பெற உழைத்து வந்தனர். வென்ற மேடையில் கூட சிங்களவர்களின் வாக்குகளில் வென்றாலும், தமிழர்கள், முஸ்லீம்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன் என்று உற்சாகமாக பேசியுள்ளார்.

நன்றி - டைம்ஸ் - நவ. 22, 2019 ருத்ரோநீல் கோஷ்



பிரபலமான இடுகைகள்