இடுகைகள்

காலநிலை மாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்துபோன மரத்தின் எமோஜி!

படம்
      இறந்துபோன மரத்தின் எமோஜி! இனி போன்களில் இறந்துபோன மரத்தின் எமோஜியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதை மகிழ்ச்சியான செய்தி என்று கருதமுடியாது. பகிரவும் முடியாது. 2022ஆம் ஆண்டு இறந்து மரத்தின் எமோஜி சிந்தனை உருவானது. அது அண்மையில் செயலாக்கம் பெற்றுள்ளது. யுனிகோட் கன்சோர்டியம் என்ற தன்னார்வ அமைப்பு, புதிய எமோஜியை ஏற்றுக்கொண்டுள்ளது. இறந்த மரத்தின் எமோஜி, காலநிலை மாற்ற பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுக்கானது. இயற்கையாகவே வறட்சி என்பது உலக நாடுகளின் பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் செயல்பாட்டால் ஏற்படுத்துவது வேறுவகையானது. புதிய எமோஜியை யோசித்தது சற்று முன்னரே என்றாலும் பல்வேறு பிரச்னைகளை பேசும்போது இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது என்றார் எமோஜி கமிட்டி தலைவரான ஜெனிபர் டேனியல். துருவத்தில் பனி உருகுவது, பிளாஸ்டிக் மாசுபாடு, கடல்நீர்மட்டம் உயர்வது, பன்மைத்தன்மை குறைவது என பல்வேறு பிரச்னைகளை எமோஜி மூலம் பேசலாம். 1970 தொடங்கி இன்றுவரை வறட்சியால் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இறந்துள்ளதாக ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இன்று, 2.3 பில்லியனுக்கும...

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தைரியமான நடவடிக்கைகள் தேவை!

படம்
  ஜேன் ஃபாண்டா jane fonda stephanie zacharek அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகை. இவரை விட இவரது பெற்றோருக்கு புகழ் அதிகம். ஹென்றி ஃபான்டா, பிரான்சிஸ் ஃபோர்ட் சீமோர் ஆகியோருக்கு பிறந்த பிள்ளை. பெற்றோர் தொழி்ல் நடிப்பு என்றாலும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், டிவி தொடர்களிலும் கூட நடித்துள்ளார். கிரேஸ் அண்ட் ஃபிராங்கி என்ற தொடரை இந்த வகையில் குறிப்பிடலாம்.  ஜேன், 1970ஆம் ஆண்டிலேயே பூர்விக அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். கூடவே, அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரையும் கூட தவறு என்று வாதிட்டார். தற்போது தன்னார்வ அமைப்பைத் தொடங்கி தன்னைபோல ஈடுபாடு கொண்டவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். 2020ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டம் நடத்தி சூழல் பிரச்னைகள் மீது கவனம் கொண்டு வந்தார். அதற்கு எதிர்வினையாக ஐந்துமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அடைபடுவதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவர் போக்கி்ல் இயங்கி வருகிறார்.  காட்டுத்தீ காரணமாக பறவைகள் வலசை செல்ல ம...

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த ந...

அதீத நிலையை எட்டும் காலநிலை மாற்ற விளைவுகள்

படம்
  காலநிலை மாற்றம் குடிநீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு, மழை வெள்ளம் சமயத்தில் மட்டும் நாளிதழ்கள் பத்திரிகைகள் உறக்கத்திலிருந்து எழுந்து செய்திகளை வெளியிடுவார்கள். மற்ற நேரங்களில் கோவிலுக்கு செல்ல பிரதமர் செய்த விரதம் என சொம்படிக்கும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள். இதற்கு, சில ஆங்கில தேசிய நாளிதழ்கள் விதிவிலக்காக உள்ளன. அவர்களை பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. வாங்கிய பணம் அப்படி பேச, எழுத வைக்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும். நாம், காலநிலை மாற்றம் பற்றிய விஷயத்தைப் பார்ப்போம்.  1850ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகளவில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், மனித செயல்பாடுகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.   வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்ப அலை, பஞ்சம், வெள்ளம், புயல், காட்டுத்தீ சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துவருகின்றன. காலநிலை மாற்றத்தில் எல் நினோ, லா நினோ ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், ராயல் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் கிளைமேட் சேஞ்ச...

ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்

படம்
  கார்டன் புச்சனன் காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை. மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும். பணம் முக்கியம் தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன. உடற்பயிற்சி காட்...

அமெரிக்காவில் அதிகரிக்கும் காலநிலைமாற்ற பதற்றம் - கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வானிலை ஆப்கள்

படம்
  காலநிலை மாற்ற பதற்றம் கொரோனாவுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. பலரும் வேலை என்பதை விட குடும்பம் முக்கியம் என மாறிவிட்டனர். சொந்த ஊருக்கு திரும்பி சென்று தெரிந்த வேலைகளைப் பார்க்கிறார்கள். அதைவிட முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் வாழத் தொடங்கிவிட்டனர். அலுவலகத்தில் செய்து வந்த பணிகள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே செய்யுமாறு மாறிவிட்டன. பெருநிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப உத்தரவிட்டும் வேலை செய்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை. ஏராளமானோர் வேலையைக் கைவிட்டனர். இதெல்லாமே மனிதர்களின் பதற்றமான மனநிலையை அடையாளம் காட்டுவதுதான். பெருந்தொற்றுக்கு முன்பே வெப்ப அலை பிரச்னை இருந்தாலும் தற்போது அது தீவிரமாகிவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்ஸாஸில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தது. அங்கு வாழ்ந்தவர்கள் பீதியடைந்து, இங்கேயே இருக்கலாமா, வெப்பம் அதிகரித்தால் வேறு நகரங்களுக்கு போகலாமா என யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.   இவர்களின் உளவியல் பீதியை வானிலை ஆப்கள் மேலும் அதிகரித்தன. அமெரிக்கர்களில் 50 சதவீதம் பேர் வானிலை ஆப்...

சூழல் போராட்டங்களால் பாதுகாக்கப்படும் இயற்கை சூழல்!

படம்
  புத்துயிர்ப்பு தொழில்வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவது இடையறாமல் நடந்து வருகிறது. இதோடு ஒப்பிடும்போது, மரக்கன்றுகளை நடும் செயல் சற்றுவேகம் குறைவானதாகவே உள்ளது. காடுகள் வளர்க்கப்பட்டால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவு குறையும். மண் அரிப்பு மெல்ல குறையும். இதெல்லாம் தாண்டி இயற்கை வளம் சீரானால் வேலைவாய்ப்புகள் கூடும். மரங்கள், கார்பனை உறிஞ்சி தனது வேர்ப்பகுதியில் சேமிக்கிறது. 20-30 சதவீத அளவுக்கு மரத்தின் உயிரியல் பகுதி, கார்பனை உறிஞ்சும் ஸ்பான்ஞ்ச் போல செயல்படுகிறது. இறந்த அழுகிய மரத்தின் வேர்கள் கார்பனை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கை செய்யும் மரங்கள், கழிவுப்பொருளாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. காடுகள் அழிந்தாலும் அதனை செயற்கையாக முறையில் மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புறங்களில் உருவாக்க முயல்கிறார்கள். இந்தவகையில் நகர்ப்புற கட்டுமானங்களுக்கு புகழ்பெற்ற சிங்கப்பூரில் கூட செயற்கையான பசுமைப்பரப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இயற்கை சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டால் அதை மறுகட்டுமானம் செய்வதற்கு சிறிது காலம் தேவை. மனிதர்கள் தங்களது தலையீட்டாலும், மாசுபாடுகளை உருவாக்குவதாலும் இயற்கை ...

பொருட்களை திரும்ப பயன்படுத்தும் வட்டப் பொருளாதாரம்!

படம்
  வட்ட பொருளாதாரம் ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டு அதை அப்படியே பயன்பாடு முடிந்ததும் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவது சூழல் பிரச்னையை தீவிரமாக்குகிறது. இதற்கு எதிரானது, வட்டப் பொருளாதாரம். அதாவது சர்குலர் எகனாமி. இக்கருத்துப்படி, மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து அதைப் பயன்படுத்துவது, பிறகு அந்தப் பொருளை மீண்டும் மறுசுழற்சி செய்வது ஆகியவை உள்ளது. இதனால், கழிவுகள் உருவாவது குறைக்கப்படும். இதன்மூலம் இயற்கை சூழல் கெடுவது பெருமளவு குறைக்கப்படுகிறது. லீனியர் எகனாமி முறையில் பொருட்கள் பயன்பாடு முடிந்ததும் நேரடியாக குப்பைக்கு சென்றுவிடுகிறது. அதில் பயன்பாடு ஏதுமில்லை. அந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இந்த முறையில்தான் பல நூற்றாண்டுகளாக தொழில் உற்பத்தி நடைபெற்று வந்தது. நன்னீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது தொடங்கப்பட வேண்டும். அல்லது நீர்த்தேவையைக் குறைத்து சிக்கனமாக செயல்படுவது முக்கியம். பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்காத வகையில் வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டு...

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில க...

இயற்கையான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பு!

படம்
  காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் வெப்ப அலைகள் உருவாகின்றன. இதன் விளைவாக, காற்றிலுள்ள ஈரப்பதம்,வெப்பமான காற்றால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு தீவிரமாவது, வெள்ள பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. வெப்ப அலைகள் தொடர்ந்தால், நாட்டில் பஞ்சம் ஏற்படும். கடல் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம் தீவிரமான புயல்களை, சூறாவளியை ஏற்படுத்துகிறது. இந்த புயல்களின் சராசரி வேகம் மணிக்கு 150க்கும் அதிகம்.   கடலில் ஈரப்பதம் மிக்க காற்று, சூடான காற்று ஆகியவற்றின் சுழற்சி காரணமாக புயல் உருவாகிறது. சூடான காற்று வளிமண்டலத்தில் உயரமாக மேலே சென்று பிறகு குளிர்ந்து குமோலோனிம்பஸ் என்ற மேகங்களாக உருவாகிறது. இந்த மேகம் மூலமே கனமழை பெய்கிறது. அமில மழை , பள்ளிப் பாடங்களிலேயே உண்டு. கரிம எரிபொருட்கள் நீரில் கரைந்து சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இப்படி வேதிப்பொருட்கள் மழையாக மண்ணில் பொழியும்போது மண்ணின் வளம் கெடுகிறது. நன்னீர் நிலைகள் கெடுகின்றன. மரங்கள் அழியத் தொடங்குகின்றன. மின் விளக்குகளின் வெளிச்சமும் மனிதர்களின் உயிரியல் கடிகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்விளக்க...

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற...

அதிவேக வேளாண்மை விரிவாக்கத்தால் சிதைந்துபோன சூழல் சமநிலை!

படம்
  உரங்களால் கெட்டுப்போன சூழல் சமநிலை 1960ஆம் ஆண்டு அதிக விளைச்சல் தரும் விதமாக வேளாண்மை துறை மாற்றப்பட்டது. ஏனெனில் அதிகளவு மக்கள்தொகை உருவாகத் தொடங்கிய சூழல். இதனால் காடுகள் அழிக்ககப்பட்டு நன்னீர்நிலைகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படத் தொடங்கின. உணவு உற்பத்தி அதிகரித்தது உண்மை. அதேநேரம் வறுமை, உணவு வீணாவது, மக்களுக்கு இடையே பொருளாதார பாகுபாடு, வசதிகளைப் பெறுவதில் பெரும் இடைவெளி ஆகியவையும் ஏற்பட்டன. உலக நாடுகளில் பல கோடி மக்கள் பட்டினியாக கிடந்தனர். அடிப்படையான நுண் ஊட்டச்சத்து சிக்கலும் எழத் தொடங்கியது. உணவுக்கு கொடுத்த விலை எந்திரமயமாதலுக்கான முதலீடு, தொழிலாளர்கள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை காரணமாக வேளாண்மை துறை முன்னேற்றம் கண்டது. அதிக விளைச்சல் கொண்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக இயற்கையில் சூழல் ரீதியான பின்விளைவுகள் உருவாயின.   மாசுபாடு, பல்லுயிர்த்தன்மை அழிவு, மண்ணின் வளம் அழிவது, ஒரேவிதமான பணப்பயிரை பயிரிடுவது, பண்ணை விலங்குகளின் நலனில் கவனக்குறைவு ஆகியவற்றை உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய உரங்களின் தே...

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட...