இடுகைகள்

பாகிஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ட்ரோன்களுக்கு அனுமதி! - மத்திய அரசின் புதிய முடிவு!

படம்
  மத்திய அரசு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான சான்றிதழை எளிமையாக அளிக்கும்படி விதிமுறைகளை மாற்றியுள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டு உலகளவிலான ட்ரோன் மையமாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்துறைகளிலும் பொருளாதாரம் வளரும் என நம்புவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் நாம் வானில் பறந்து வரும் ட்ரோன் டாக்சிகளை பார்க்க முடியும் என ஜோதிராவ் சிந்தியா கூறியுள்ளார். இவர்தான் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்.  500 கி.கி அதிகமுள்ள ட்ரோன்களை பயன்படுத்தலாம் என அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 300 கி.கி எடையுள்ள ட்ரோன்கள்தான் அனுமதிக்கப்பட்டது.  சரக்குகளை கொண்டு செல்வதற்கு இனி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட  வாய்ப்பு அதிகம்.  இதில் ஏற்படும் தவறுகளுக்கு அபராதம் ஒரு லட்சம் என்று விதிக்கப்பட்டுள்ளது. பிற விதிகள் மீறும்போது அபராதம் கூடுதலாக இருக்கலாம்.  ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான விதிகள் மஞ்சள், பச்சை, சிவப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் பகுதியில் 12 முதல் 45 கி.மீ வரையில் பயன்படுத்தக்கூடாது என்றும், பச்சை பகுதியில் 8 முதல் 12 கி.மீ தொலைவு வரை பயன்படுத்தக்கூடாத

இந்தியாவின் எல்லைகளைப் பிரித்த ராட்கிளிப்! - இந்தியா 75

படம்
  1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி. நள்ளிரவு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. விதியுடனான சந்திப்பும் கூட நடந்தது. ஆனால் அதில் முக்கியமான பிரச்னை ஒன்று இருந்தது. இந்தியா எங்கே முடிகிறது, பாகிஸ்தான் எங்கே தொடங்குகிறது என்ற எல்லைப் பிரச்னைதான்.  அப்போதைய ஆட்சியாளரான மவுண்ட் பேட்டனுக்கு இருந்த பிரச்னை பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகளும் எல்லைக்காக மீண்டும் குற்றம்சாட்டி சண்டை போடக்கூடாது என்பதுதான். அவர் இதற்காக எல்லைகளை பிரிப்பதற்கான யோசனையை உருவாக்கினார்.  இந்திய அரசுக்கு, அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கான காலத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்கெனவே இழந்துவிட்டது.  1942ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் கமிஷனும் தோல்வியுற்றது. 1946ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியும் இரு நாடுகளை பிரிப்பது அவசியம் என்று கூறிவிட்டது. இதில் முக்கியமாக எழுந்த பிரச்னை, துணைக்கண்டத்தை எப்படி பிரிப்பது என்பதே.  எல்லைகளை பிரிக்க அழைக்கப்பட்டவர் ஒரு வழக்குரைஞர். இவர் பெயர் சிரில் ராட் கிளிப். 48 வயதானவர் அதிக நாடுகள் பயணித்தது கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எ

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் காரேஜ் பள்ளி!

படம்
  காரேஜ் பள்ளி! பாகிஸ்தானின் கராச்சியில் செயல்பட்டு வரும் காரேஜ் பள்ளிக்கு வழிகேட்டால் புன்னகையுடன் வழிகாட்டுகிறார்கள். மறைந்த விமானப்படை வீரரான கணவரின் கனவை ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி தொடங்கி நிறைவேற்றி வருகிறார் சபினா முஸ்தபா.  கணவர் சஃபி மறைந்தபோது கைக்குழந்தையோடு தவித்த  சபினாவுக்கு வயது 21. அப்போது அவரது வீட்டில் பணிபுரிபவரின் பிள்ளைக்கு பள்ளியின் சேர்க்கை அனுமதி கிடைக்கவில்லை. இச்சம்பவத்தை சபினாவிடம் கூறியவர், தனது பிள்ளைக்கு நீங்களே கற்பிக்க முடியுமா? என கேட்டார்.  சொந்த துக்கத்தை மறந்து கல்விப்பணியை கையில் எடுத்தார் சபினா. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சஃபி காருண்ய அறக்கட்டளையை உருவாக்கி,  சிறுவர்களுக்கான பள்ளியை தன் வீட்டு காரேஜில் தொடங்கினார்.  இங்கு படிக்கச் சேர்ந்த முதல் மாணவி சோமியா. பின்னாளில் இப்பள்ளியில் படிக்க சேர்ந்த பதினைந்து சிறுமிகளும் வீட்டுவேலை செய்பவர்களின் பிள்ளைகள்தான். இன்று ஐநூறு குழந்தைகளுக்கு மேலாக கல்வியமுது ஊட்டியுள்ளார் சபினா. "கல்வி என்பது ஒருவரை தற்சார்பாக சிந்திக்க வைப்பதோடு அவர்களை மனிதநேயமிக்க மனிதர்களாக உருவாக்குவது அவசியம்." என்கிறார் ச