இடுகைகள்

கோடிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்கிரிப்சன் செய்யப்பட்ட கொலைத்தகவல்கள் - ஸோடியாக் கொலைகாரர்

படம்
  வாழ்க்கையே பா.வெங்கடேசன், கோணங்கி ஆகியோரின் நாவல்கள் போல இருக்கிறதென்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் ஜோடியாக் என்ற கொலைகாரர் தனது கொலைகளை அப்படித்தான் செய்து வந்தார். அமெரிக்காவில் குறிப்பாக பெண்களைக் கண்டால் மட்டும் குத்துக்கு பத்து என்பது போல கத்தியால் கூடுதலாக குத்திக் கொன்றார். அவரை காவல்துறை என்ன முயற்சி செய்தும் பிடிக்கமுடியவில்லை. இன்று ஜோடியாக் என அமேசானில், கூகுள்பிளே புக்ஸில் டைப் செய்து தேடினால் நிறைய நூல்கள் கிடைக்கும். ஜோடியாக் கொலைகாரர் புகழ்பெற்ற காலம் 1968 முதல் 1984 காலகட்டமாகும். ஜோடியாக் கொலைகாரர் தான் யார், செய்த கொலைகளைப் பற்றிய தகவல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் காரியங்களை செய்தார். ஆனால் கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் என்ன, அவர் கோடிங் பற்றி தெரிந்த ஆள். எனவே தனது கடிதங்களைக் கூட கோடிங்காக எழுதி அனுப்புவார். கூடவே பாழும் பத்திரிகளை இன்று வரை இரண்டுபிரதி நூல் அனுப்புங்கள். படித்து விமர்சனம், மதிப்புரை எழுதுகிறோம் என்பார்களே என்று ஸ்டாம்புகளையும் கூடவே அனுப்பி வைத்த நல்ல மனிதர்தான் ஜோடியாக். ஆனால் என்ன கோபம் வந்தால் மட்டும் எதி

விழுப்புரம் இளைஞர்களை முன்னேற்ற முயலும் விக்ளக் அமைப்பு!

படம்
  இடதுபுறத்தில் முதல் நபர் திரு.கணியம் சீனிவாசன் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் விக்கிமீடியா பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, அண்மையில் ஹேக்கத்தான் உதவித்தொகைக்கு இந்தியாவில் இரு அமைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் ஒரு அமைப்பு விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. ஹேக்கத்தானில் விக்கிப்பீடியா . ஆர்க் தளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்கிறார்கள்.  பொதுவாக ஐடி நிறுவனங்கள் என்றால் ஹைதராபாத் அல்லது பெங்களூருவைச் சொல்லுவார்கள். ஆனால், விழுப்புரம் அங்கே எப்படி வந்தது என பலரும் நினைப்பார்கள்.  விழுப்புரம் ஜிஎன்யூ லினக்ஸ் பயனர்கள் குழுவின் பெயர், விகிளக். இவர்களைத்தான் விக்கி மீடியா தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் இலவச மென்பொருட்களை பயன்படுத்த கிராம மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதில் கோடிங்குகளை எழுதவும் பயிற்றுவிக்கின்றனர்.  இந்த பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான். பயிற்சி மாணவர் ஒருவரின் தாய், வீட்டு வேலை செய்து வருகிறார்.  இன்னொருவர் தினக்கூலி செய்பவர்களின் பிள்ளை என இதுபோல மாணவர்களுக்கு

புரோகிராமிங் கலக்கும் புதிய தலைமுறை சிறுவர்கள்! - தினசரி வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்க்கும் ஆப்கள்

படம்
            புரோகிராமிங் இளவரசர்கள் கணினிமொழியைக் கற்றுவரும் இந்திய சிறுவர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை தீர்க்க முயன்று வருகின்றனர். எப்போதும் புதிய ஆப்களுக்கான முதலீடுகளை இளைஞர்கள், வாலிபர்கள் தேடுவார்கள். ஆனால் இப்போது இந்தியாவில் நடப்பு மாத த்தில் மட்டும் 26 சிறுவர்கள் தங்களின் ஆப் ஐடியாவைச் சொல்லி முதலீட்டுக்கான முயற்சிகளில் உள்ளனர். ஆன்டி புல்லிங் ஆப் ஒன்றை பார்ப்போம். இதில் சிறுவர்கள் தங்கள் மீது நடத்தப்படும் கிண்டல், கேலி ஆகியவற்றை பதிவு செய்யலாம். இதில் உடனடியாக தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை கண்காணித்து தகவல் தரும் ஆப்பும் உள்ளது. நடப்புகால பிரச்னைகளுக்கான தீர்வு என்பதில் இந்த ஆப்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மும்பையைச் சேர்ந்த எஜூடெக் கம்பெனியான ஒயிட்ஹேட் ஜூனியர் நிறுவனம் இம்முறையில் 7 ஆயிரம் விண்ணப்பங்களிலிருந்து 26 ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. கிரியேட்டிவிட்டியுடன் ஆர்வமாக இருக்கும் சிறுவர்களை தடுக்க கூடாது. நாங்கள் பயிற்சியளித்து அவர்களின் முடிவுகளை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநரான கரண

படிக்காம ஜெயிச்சோமடா! - இரண்டு வெற்றிக்கதைகள்

படம்
இந்தியாவில் சுயமாக ஏதாவது கற்று வென்றவர்கள் அதிகம். காரணம் நம்முடைய கல்விமுறை அப்படி. துறுதுறுவென ஓடுபவர்களை, யோசிப்பவர்களை பள்ளி விரைவில் வெளியேற்றிவிடும். இதனால் சமூகத்தில் உருப்படியான மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இதோ. .. மும்பையில் வாழும் அருண்குமார் மாதம் 80 ஆயிரம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் அவரது கல்வித்தகுதி பத்தாவதுதான். எப்படி சாத்தியமாகிறது என அவரது குடும்பத்தினருக்கும் புரியவில்லை. அவர்கள் அதிகம் கல்வி கற்காதவர்கள். இவரது குடும்பம் உத்தர்காஷி மாவட்டத்திலுள்ள மன்பூரில் வசிக்கிறது. ஆகாஷ், வீட்டு வேலைகளுக்கான உதவியாளராக வந்து இன்று கோடிங் கற்று ஐபோன்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி வருகிறார். இவரது தந்தை அசாம் போலீசில் ஓட்டுநராக பணிபுரிந்துகொண்டு டெல்லியில் வசித்தனர். டேராடூனில் உள்ள பள்ளியில் ஆகாஷ் சேர்க்கப்பட்டார்.  ஒருமுறை கல்விக்கட்டணத்தை அறை வாடகைக்காக செலவழித்துவிட்டார் ஆகாஷ். பள்ளி நிர்வாகம். அவரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது. உடனே தன் கிடாரை எடுத்துக்கொண்டு மும்பைக்கு இசை தொடர்பான வேலை கிடைக்கும் என வந்துவிட்டார். அங்கு ஹவுசிங்.