இடுகைகள்

கரும்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனவெறி கொடுமைக்கு இழப்பீடு வேண்டும்! - இது பார்படோஸ் புரட்சிக்குரல்

படம்
  பார்படோஸிலுள்ள தேவாலயம் இனவெறிக்கும் கொத்தடிமைத்தனத்திற்கும் இழப்பீடு வேண்டும்! பார்படோஸ், இன்று குடியரசு நாடு, ஆனால், அங்கு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பின கொத்தடிமைகளை கொண்டிருந்தது. அங்கு விளைந்த கரும்பை விளைவித்தவர்கள் கறுப்பினத்தவர்கள்தான். கரும்பு விளைச்சலுக்கு டிராக்ஸ் ஹால் என்ற பகுதி புகழ்பெற்றது. லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக வேலை பார்க்கவைக்கப்பட்டனர். இப்படி வந்தவர்களில் வெள்ளையர்களின் கொடுமை, காலநிலை, நோய் என பல்வேறு சிக்கல்களால் முப்பதாயிரம் பேருக்கும் மேல் இறந்தனர். இந்த தொழிலாளர்களைப் பற்றிய ஆவணங்களைக் கூட வெள்ளை முதலாளிகள் மறைத்து, பின்னர் அதை நெருப்புக்கு இரையாக்கினர். அதனால் பெரிதாக நிலைமை ஏதும் மாறிவிடவில்லை. வெள்ளையர்கள் இன்றும் வசதியானவர்களாகவே வாழ்கின்றனர். கறுப்பினத்தவர்கள் இழப்புகளை சந்தித்து அதிலிருந்த மீண்டு வர பல தலைமுறைகள் ஆகிவிட்டது. இன்று அங்கு வேலை செய்தவர்களின் பேரன், பேத்திகள் என அனைவரும் இணைந்து தங்கள் முன்னோர் அங்கு கொத்தடிமைகளாக இருந்து உழைத்த உழைப்பிற்கு இழப்பீடு கேட்டு வருகின்றனர். இ