இடுகைகள்

வட்டப்பாதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எவ்வளவு வேகமாக நகர்கிறோம்? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
pixabay மிஸ்டர் ரோனி எவ்வளவு வேகமாக நாம் நகர்கிறோம்? பஸ், கார், பைக் என நகர்ந்து செல்வது வேறு. ஆனால் பூமி தன்னைத்தானே சுற்றியபடி நகர்கிறது. அப்படியே நகர்ந்து சூரியனை சுற்றி வருகிறது. பூமி மட்டுமல்ல அனைத்து கோள்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. பஸ்சில் அறுபது கி.மீ வேகத்தில் செல்லும்போது நாம் நகர்கிறோமா இல்லையா? நிச்சயமாக நகர்கிறோம். நகரும் வேகத்தை மட்டும் பார்ப்போம். பூமியின் வட்டப்பாதை பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் நாம் நகருவது தெரியவில்லை. ஒரு நொடிக்கு 30 கி.மீ வேகத்தில் பூமி சுற்றி வருவதால், அதிலுள்ள நாமும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் இந்த வேகம் நின்று போனால், என்னாகும்? நாம் தூக்கி எறியப்படும். சூரிய மண்டலத்தின் வட்டப்பாதை ஒரு நொடிக்கு 230 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் நமது சூரியமண்டலம் சுற்றி வருகிறது. பால்வெளியின் வேகம் ஒரு நொடிக்கு  ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்

சந்திரயான் ஸ்பெஷல்!- நோக்கம் என்ன?

படம்
சந்திரயான் 2 ஏவப்பட்டதன் நோக்கம்! இஸ்ரோ நிறுவனம், சந்திரயான் 1யை விண்ணுக்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது உலக நாடுகள் நிலவை ஆராய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம், வெப்பமயமாதலால் பூமி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பூமியில் நீராதாரம் குறைந்து வருவதும், மக்கள் வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அரிதாகி வருவதும் முதன்மைக் காரணங்கள். இந்தியா, நிலவை ஆராய சந்திரயான் 2 வை அனுப்பி வைக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து  முயற்சித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக சந்திரயான் விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. விண்ணில் ஏவப்பட்டு 52 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப்பரப்பில் சந்திரயான் 2 விண்கலம் இறங்கும். நாசா ஆய்வுக்கு அனுப்பிய விண்கலங்கள் ஈக்குவடார் பகுதியில் இறங்கின. சீனாவின் சாங் 4 விண்கலம் தெற்குத் துருவப் பகுதியில் இறங்கி நிலவின் மறுபுறத்தை சோதித்தது. இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றவிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, பதினாறு நாட்கள் பூமியின் வட்டப்பாதையை வலம் வரும்.

இருகோள்கள் ஒரே வட்டப்பாதையில் சாத்தியமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி இரண்டு கோள்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிவருவது சாத்தியமா? இரண்டு கோள்களின் கோணங்களைப் பொறுத்தே இதனை உறுதிப்படுத்த முடியும். ஒன்றைப் பின்பற்றி ஒன்று வரலாம். ஆனாலும் கூட இரண்டும் தன்னைத்தானே சுற்றும் வேகம், ஈர்ப்புவிசை ஆகியவையும் இதில் முக்கியமானது. இதோடு கோள்களை இயக்கும் மையத்திலுள்ள நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசை வட்டப்பாதையை தீர்மானிக்கிறது. சூரியன், வியாழன் ஆகியவற்றுக்கு இடையே இதுபோல சில கோள்கள் சுற்றி வருகின்றன. நன்றி: பிபிசி