இடுகைகள்

யதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வின் இயல்போட்டத்தில் தன்னை அறிதல் - யதி - தத்துவத்தில் கனிதல்

படம்
  நித்ய சைதன்ய யதி யதி தத்துவத்தில் கனிதல் ஜெயமோகன், பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா தன்னறம் வெளியீடு   ஈழவ சமூகத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு. இவரின் சீடரான நடராஜ குருவின் மாணவர்தான் நித்ய சைதன்ய யதி. தத்துவம் சார்ந்த கல்வி கற்றுள்ளவரான இவர், இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். நூலில் யதி தன்னுடைய வாழ்பனுவங்களையும், தத்துவங்களையும் விளக்கி பேசுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஜெயமோகன், பாவண்ணன், எம், கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். யதி, தனது குருவான நடராஜரிடம் கற்ற கல்வி, அவருக்கும் தனக்குமான ஊடல் கொண்ட உறவு ஆகியவற்றைப் பற்றி சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ளார். சிறுவயதிலேயே ஏதோ நாளிதழில் வந்த நடராஜ குருவின் புகைப்படத்தை வெட்டி எடுத்து வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் யதி, நடராஜரின் மாணவராக இணைகிறார். இவரும் இன்னும் இரண்டு மாணவர்களும் சேர்ந்து நாராயண குருகுலத்தை மேம்படுத்துகின்றனர். குருவின் கொள்கைகளை உலகம் முழுக்க பரப்ப இதழ் நடத்தியதோடு, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளனர். யதி, மலை