சீனாவிலுள்ள பள்ளி வகைகள்
எலைட் பள்ளி இதில் தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் உண்டு. சீனாவில் தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை எலைட் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வி, கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்வி, மாணவர்களுக்கான வசதி, சூழல் ஆகியவை சொகுசு ஓட்டல் போல உயர்தரமாக இருக்கும். நகர மேல்நிலைப்பள்ளிகள் அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள். இப்பள்ளியில் மாணவர்கள் சேர்வது, பல்கலைக்கழக அனுமதி தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே. தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேலை செய்வதற்கான திறன்களை பெற முடியும். சுயாட்சி முறை என்பதால் சுதந்திரம் உண்டு. அரசின் பாடங்களை கற்றுக்கொடுத்தபிறகு வேறு விருப்ப பாடங்களை மாணவர்கள் கற்கலாம். அரசுப்பள்ளிகளை விட வசதிகள் நன்றாக இருக்கும். குறைபாடு, நிதியுதவி. வயதான ஆசிரியர்கள். தொழில்பயிற்சிபள்ளிகள் கல்விக்கடன் வாங்கிப் படிக்க எல்லோராலும் முடியாது. எனவே, படித்து முடித்த உடனேயே வேலைக்கு செல்ல உதவும் பள்ளிகள் இவை. வாகனம் ஓட்டுதல், சமையல், உலக வணிகம், சுற்றுலா, சேவை நிர்வாகம், அல...