இடுகைகள்

குரோமோசோம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரோசோம்களின் எண்ணிக்கை உயிரினங்களைப் பொறுத்து மாறுபடும்! ஜே.வி. சமாரி

படம்
  பரிணாம வளர்ச்சி உயிரியலாளர்  ஜேவி சமாரி ( JV Chamary ) அனைத்து உயிரினங்களும் குரோமோசோம்கள் கொண்டிருக்குமா? ஆம். எளிமையான செல் அமைப்பைக் கொண்ட பாக்டீரியா, வட்ட வடிவிலான குரோமோசோம் அமைப்பைக் கொண்டிருக்கிறது. சிக்கலான செல் அமைப்பைக் கொண்டுள்ள உயிரினங்கள் அதிக குரோமோசோம்களைக் கொண்டுள்ளன என்று கூறமுடியாது. ஜேக் ஜம்பர் என்ற ஆண் எறும்பு, ஒரே ஒரு குரோமோசோமைக் கொண்டுள்ளது. ஆனால், ஒற்றைச் செல்லைக் கொண்டுள்ள அமீபா போன்ற ஸ்டெர்கீலா (sterkiella) என்ற உயிரி 16 ஆயிரம் குரோமோசோம்களை கொண்டுள்ளது.  உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை  மாறுபடுவது ஏன்? உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை அதன் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தது. மனிதக்குரங்குகளின் உடலில் 48 குரோமோசோம்கள் என்றால் அதிலிருந்து வளர்ச்சி பெற்ற மனிதர்களின் உடலில் மொத்தம் 46 குரோமோசோம்கள்தான் உள்ளன. நமது உடலில் தேவையான குரோமோசோம்கள் கூடுதலாக இருந்தால் அல்லது  இல்லாமல் போனால் புற்றுநோய் ஏற்படும். டவுன்  சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில், 21 குரோமோசோம்கள் மூன்று நகல் பிரதிகளாக இருக்கும்.  அனைத்து உயிரினங்களிலும் குரோமோசோம்கள

போவரி சட்டன் கோட்பாடை கண்டுபிடித்த வால்டர் சட்டன்!

படம்
Bio டேட்டா! பெயர்: வால்டர் சட்டன் ( 1877) பிடித்த துறை: மரபணு, மருத்துவம் சிறுவயது ஆர்வம் : பண்ணையிலுள்ள இயந்திரங்களைப் பழுது பார்ப்பது பிறர் அறியாத திறமை: கேமராவை தானே உருவாக்கியது திருப்பம்: பொறியியலைக் கைவிட்டு உயிரியல் படிப்பில் இணைந்தது கண்டுபிடிப்பு: மரபணுக்களைக் கொண்டுள்ள குரோமோசோம்களின் பங்கு (Boveri -Sutton Theory)  சாதனை: தி குரோமோசோம் இன் ஹெரிடிட்டி ( “The Chromosomes in Heredity,”1903) ஆராய்ச்சி அறிக்கை புகழ்பெற்றது: மரபணுவியல் துறை ஆராய்ச்சி முன்னோடி: இ.பி.வில்சன் (E. B. Wilson) வினோதம்: 39 வயதில் குடல்வால் சிதைவால் இறந்தார். அப்போது, குடல்வால் சிதைவு பாதிப்பை குணமாக்குவது பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.   https://www.lindahall.org/walter-sutton/ http://www.dnaftb.org/8/bio-2.html