இடுகைகள்

குளூட்டன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடனே போராடும் போராட்டம்! - ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது?

படம்
        அலர்ஜி என பொதுவாக அனைவரும் சொல்வது இதைத்தான் . தூய தமிழில் இதனை ஒவ்வாமை என்று கூறலாம் . சாதாரணமாக பார்த்தால் தோல் சிவப்பது , கொப்புளஙகள் ஏற்படுவது , அதில் சீழும் ரத்தமும் கலந்து வருவது , பிறகு இதுவே தீவிரமானால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரும் கூட போகலாம் . இதனை மருத்துவ முறையில் பார்த்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களுக்குமான போர் என்று கூறலா்ம் . வளர்ந்து வரும் நாடுகள் , வளரும் நாடுகள் , வல்லரசு நாடுகளிலும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன . ஒவ்வாமை தொடர்பாக நான் மேலே கூறியவை மிகச்சில அறிகுறிகள்தான் . இதையும் தாண்டி மலக்கட்டு , வயிற்றுப்போக்கு , குழந்தைகளின் அதீத செயல்பாடு , மைக்ரேன் தலைவலி , மன அழுத்தம் , ஆஸ்துமா , கண்களில் நீர் கொட்டுவது , கண் எரிச்சல் , ரைனிடிஸ் ( மூக்கில் ஏற்படும் பாதிப்பு ), உடல் சோர்வு , தோலில் அரிப்பு , எடை குறைவு ஆகியவை ஏற்படும் . பொதுவான அலர்ஜியால் ஆஸ்துமா , கண் , மூக்கு எரிச்சல் , தோல் அரிப்பு , உணவு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன . இதற்கு அறிகுறிகளை மட்டும