இடுகைகள்

காஞ்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மனிடமிருந்து ரத்தம் சிந்தாமல் காஞ்சியை மீட்கும் நந்திவர்மன்! - சமுத்திரகோஷம் - உதயணன்

படம்
  எழுத்தாளர் உதயணன் சமுத்திர கோஷம் உதயணன் வைதேகி பதிப்பகம் விலை ரூ.110 பல்லவ மல்லன் நந்திவர்மன், பாண்டியர்களோடு எல்லையில் போரிடும்போது ஜென்ம எதிரியான சாளுக்கிய அரசு, பின்புறமாக வந்து மன்னன் இல்லாத காஞ்சி கோட்டையை சூழ்ச்சியாக கைப்பற்றுகிறது. பாண்டியர்களை வென்ற நந்திவர்மன், திரும்பி வந்து தனது பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியை எப்படி கைப்பற்றுகிறான் என்பதே கதை. இந்த சரித்திர நாவலில் கல்வெட்டுகளின் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள தகவல்படி, நந்திவர்மன் இல்லாத காலகட்டத்தில் சாளுக்கியர்கள் காஞ்சியை தங்கள் வசமாக்குகிறார்கள். பிறிதொரு காலகட்டத்தில் சாளுக்கியர்களிடமிருந்து அதை நந்திவர்மன் மீட்கிறான். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.   அந்த இடத்தை பயன்படுத்தி நாவலை எழுத்தாளர் உதயணன் எழுதியிருக்கிறார். நாவலில் பராக்கிரம யுத்தங்கள், ஒற்றைக்கு ஒற்றை என சண்டைகள் ஏதும் கிடையாது. அனைத்துமே சூழ்ச்சி, தந்திரம் என மூளை விளையாட்டுகள்தான் நிறைந்திருக்கின்றன. நந்திவர்மன் கதையில் வரவே அதிக பக்கங்களை நீங்கள் தாண்டவேண்டும். நந்திவர்மனை பிழையில்லாத வீரனாக எழுத்தாளர் உத