இடுகைகள்

பிசாசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருமணமாகாத இளம் பெண்களின் ரத்தத்தைக் குடித்து இதயத்தைத் தின்னும் கொடூர பிசாசு!

படம்
      வா அருகில் வா கோட்டயம் புஷ்பநாத் திகில் நாவல் கோட்டயம் புஷ்பநாத் எழுதும் நாவலில் என்னென்ன எதிர்பார்ப்போம். இயக்குநர் சுந்தர்சி போல கிளுகிளுப்பாக திகில் கதைகளை எழுதுவார். இதிலும் பெண்களின் பெண்களின் நைட் கவுன் பட்டன்கள் தெறிக்கின்றன. அதைவிட முக்கியம், நாயகி லூசி இறுதியாக கர்த்தரை சரணடைந்து தனது பாவத்தை ஏற்று மடைமாறுகிறாள். அதனால் அவள் உயிர் பிழைக்கிறாள். ஜானி, லூஸி இருவருக்கும் பெற்றோர் பார்த்து வைத்து மணம் செய்கிறார்கள். முதலிரவிலேயே மணமகன் லூசியை தொடாமல் மதுபானத்தை தொட்டு ரசித்துக் குடிக்கிறான். சிகரெட் புகைக்கிறான். இதிலேயே அவனுக்கு உடலுறவில் பெரிய ஈடுபாடு இல்லையோ என்று தோன்றுகிறது. அங்கு வந்து பரிசில், ஒரு கடிதம் இருக்கிறது. அதில் அவர்கள் தேனிலவை தனது பங்களாவில் கொண்டாடலாம் என பெர்னார்ட் என்பவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் யாரென்று கூட விசாரிக்காமல் இருவரும் தேனிலவுக்கு அந்த மர்ம பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நேரும் திகில் அனுபவங்கள்தான் கதையின் முக்கியப் பகுதி. லூசிக்கு அந்த பங்களா, அதன் வினோதமான இயல்பு எல்லாமே பயம் தருகிறது. ஆனால் கணவன் மது...