இடுகைகள்

கல்வித்தரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பு உதவுமா?

படம்
pixabay தனியார் வழங்கும் கல்வி உதவுமா?  கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.  அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில் அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.    அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள் நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.    ”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாராயண