நான்கு நிமிடத்தில் செய்திகளை கதைபோல எளிமையாக விளக்கும் பேப்பர்கிளிப்!
நாளிதழ்கள், மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள் என நிறைய வாசிப்போம். அதிலுள்ள செய்திகளை முக்கியம் என்றால் குறித்துவைப்போம். அல்லது அதை எழுதும் பழக்கம் இருப்பவர்கள் உடனே கட்டுரையாக எழுதி விடுவார்கள். இப்படியான செய்திகளை பிறருக்கு கதைபோல சொல்லும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. நவீன காலத்தில் இப்படியான பாணி செய்திகள், கட்டுரைகள் பலருக்கும் தேவைப்படுகிறது. பேப்பர்கிளிப் தளத்தில் நாளிதழ், டிவி சேனல், இணைய கட்டுரைகள் என பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களை சேகரித்து அதை கதையாக மாற்றுகிறார்கள். நான்கு நிமிடங்கள் போதும். அழகான ஒரு ஊக்கமூட்டும் கட்டுரையைப் படித்துவிடலாம். உதாரணத்திற்கு காந்தியால் தாக்கம் பெற்ற டெக் ஆளுமை ஒருவரைப் பற்றி பார்ப்போம். ஆப்பிள் நிறுவனத்தை எலக்ட்ரானிக்ஸ் சார்ந்து திசை திருப்பிய தலைவர்களில் ஒருவர், ஸ்டீவ் ஜாப்ஸ். அவர், தனது இளமைக்காலமான பத்தொன்பது வயதில் இந்தியாவுக்கு வந்து அலைந்து திரிந்திருக்கிறார். பிறகு, ஆப்பிளில் இருந்து பணி விலக்கப்பட்டபோதும், தேறுதலுக்காக இந்தியாவை நாடியிருக்கிறார். அவர் இந்தியாவில் இருந்து காந்தியின் இயல்பைப் புரிந்துகொள்ள முயன...