திரைப்படமாக்க தகுதியுள்ள படைப்புகளை எழுத்தாளர்களே கூறுகிறார்கள்- இமையம், சு வேணுகோபால், பவா, முருகேச பாண்டியன்
எழுத்தாளர் இமையம் |
எழுத்தாளர் சு வேணுகோபால் |
எழுத்தாளர் பவா செல்லத்துரை |
எழுத்தாளர் முருகேச பாண்டியன் |
ஆங்கில திரைப்பட
உலகில் நிறைய நாவல்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்து வருகின்றனர். இதனால் நாவலும்,
அதை அடிப்படையாக கொண்டு கதை, திரைக்கதை எழுதி
எடுக்கப்பட்ட படம் என இரண்டுமே கவனிக்கப்படுகிறது.
தமிழைப் பொறுத்தவரை பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துகளை
திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்துவது, தலைப்புகளை திருடுவது என வினோதமாக விளையாட்டுகளை
திரைப்பட இயக்குநர்கள் செய்து வருகிறார்கள். திருட்டு வெளிப்பட்டாலும் கூட நவசக்தி
விநாயகர் சத்தியமாக எனக்கு இப்படி ஒரு படைப்பு, தலைப்பு இருப்பது தெரியாது என கற்பூரம்
அணைக்க தயாராக இருக்கிறார்கள்.
இயக்குநர்கள்
ஒரு நாவலை படமாக இருப்பது இருக்கட்டும். படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள்
படைப்பை திரைப்படமாக்க தகுதி உள்ளது என நினைக்கிறார்களா என கேட்டுப் பார்ப்போம்.
எழுத்தாளர்
இமையம்
‘’ஒரு நாவலின்
எழுத்தாளர், தனது நாவலின் அடிப்படை வடிவத்தில் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்று குறைகூற
முடியாது. நாவலின் வடிவமும், இலக்கணமும், சினிமாவின் கட்டமைப்பும் வேறுபாடானவை. அதுபோல
திரைப்பட இயக்குநர், தனது இயல்பில் நாவலை எழுதினால், பிறர் அதை தவறு என்று கூறமுடியாது.
படத்தின் தயாரிப்பாளர் தனது திரைப்படத்தை சாதாரண மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும்படி
முயற்சிகளை செய்யவேண்டும்’’ என்றார்.
‘செடல்’,
‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ ஆகிய நாவல்களை திரைப்படங்களுக்கு உரிய தன்மை கொண்டவை என
இமயம் கருதுகிறார். ‘’ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரான தமிழரசன், பட்டியல் இனத்தைச்
சேர்ந்தவராக இருந்ததால் மாட்டின் உரிமையாளர்களால் தாக்கப்பட்டதை திரைப்படமாக எடுக்கலாம்.
2016ஆம் ஆண்டு தலித்துகள், பிணங்களை பொதுவழியில் கொண்டு செல்லக்கூடாது என தடுக்கப்பட்டதையும்,
1992ஆம் ஆண்டு வாச்சாத்தி வழக்கு பற்றியும் படம் எடுக்கலாம். ’’ என்கிறார். வாச்சாத்தி
வழக்கு பற்றி பேசும் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி, பி.எச். டேனியலின் எரியும் பனிக்காடு,
ஒய் பி சத்யநாரயணா எழுதிய என் தந்தை பாலைய்யா ஆகிய நூல்கள் திரைப்படங்களாக எடுக்கப்படவேண்டும்
என எழுத்தாளர் இமையம் விரும்புகிறார்.
பவா செல்லத்துரை
இமையத்தின்
கோவேறு கழுதைகள், புரத வண்ணார்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. அதை திரைப்படமாக
எடுக்கலாம். திருச்செந்தாழை எழுதிய ‘விலாசம்’ சிறுகதையைப் பற்றி பவா, நடிகர் கமல் ஹாசனுக்கு
கூறியிருக்கிறார். அந்த இலக்கியப்படைப்பு திரைப்படமாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
‘’என்னுடைய
சிறுகதைகளில் ‘நீர்’, ‘வேட்டை’, ‘சற்று’ ஆகியவை திரைப்படமாக எடுக்க வாய்ப்புள்ளதாக
கருதுகிறேன்’’ என்றார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. அண்மையில் வெளியான விடுதலை திரைப்படம்,
உண்மையில், ஜெயமோகனின் சிறுகதையை தழுவியதாக இல்லை என்று கூறுகிறார்.
எழுத்தாளர்,
விமர்சகர் நா முருகேச பாண்டியன்
தனது எழுத்தில்
கிராமத்து தெருக்கள் வழியே நாவலை திரைப்படமாக்க வாய்ப்புள்ளது என்கிறார் எழுத்தாளர்
மு பா. கூடவே எழுத்தாளர் விநாயகமுருகன் எழுதிய ‘ராஜீவ்காந்தி சாலை’, ‘சென்னைக்கு மிக
அருகில்’, எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி எழுதிய ‘இரவல் கதைகள்’ ஆகியவை திரைப்படமாக்க
ஏற்றவையாக கருதுகிறார்.
எழுத்தாளர்
சு வேணுகோபால்
‘’தமிழ் திரைப்பட
இயக்குநர்கள், இலக்கிய படைப்புகளை தங்களின் முக்கிய கதைக்கு துணையாகவே வைத்துக்கொள்கிறார்கள்.
முழுமையாக இலக்கிய படைப்பிலுள்ள ஆன்மாவை படைப்பாக வெளிப்படுத்துவதில்லை’’ என்றார் சு
வேணுகோபால்.
இவர் தனது எழுத்தில் வெளியான படைப்புகளான உள்ளிருந்து
உகற்றும் பசி, நுண்வெளி கிரணங்கள், பால்கனிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு திரைப்படங்களாக்க முடியும் என கூறுகிறார்.
புவனேஷ் சந்தர்
இந்து ஆங்கிலம்
-----------------------------------
படங்கள் - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை பெற்றவை.
நன்றி- ஸ்ருதி டிவி - எழுத்தாளர் முருகேச பாண்டியன் புகைப்படம்
கருத்துகள்
கருத்துரையிடுக