ஸிஸோபெரெனியாவால் நோயாளிகளைக் கொல்லத் தொடங்கிய செவிலியர் - பாபி

 









அமெரிக்காவின் இலினாய்ஸில் பிறந்த பெண்மணி. கூச்ச சுபாவம் கொண்ட உடல் பருமனான குழந்தை. இவருக்கு ஏழு சகோதரர்கள் உண்டு என்றாலும் அனைவருமே தசை சிதைவு குறைபாடு கொண்டவர்கள். இதில் இரண்டுபேர் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பாபியைப் பொறுத்தவரை கூச்ச சுபாவி என்பதால் அவரை எங்குமே பார்க்க முடியாது. அவரை உற்சாகமாக ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் ஞாயிறுதோறும் தேவாலயத்தில் இனிய குரலில் பாடல்களை பாடுவது, கருவிகளை இசைப்பது என அந்த தருணங்களில் மட்டுமே பார்க்கலாம். மதம் தொடர்பான விஷயங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

1973ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர், செவிலியராக வேலை பார்க்க நினைத்து அந்த படிப்பை எடுத்து படித்தார். குடும்பமே நோய் பாதிப்பு கொண்டிருந்த தால் பாபியின் வேலையும் அதைச் சார்ந்தே மாறியது.படிப்பை முடித்து தன்னை செவிலியராக பதிவு செய்துகொண்டார். பின்னாளில் டேனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆசைத் திருமணத்திற்குப் பிறகுதான், தன்னால் பிள்ளை பெற முடியாது என்ற உண்மையை அறிந்தார். வேறுவழியின்றி , தனது கணவருடன் சேர்ந்து ஆண் குழந்தையை தத்தெடுத்தார். ஆனால் நன்றாக வளர்ந்து வந்த அவனுக்குமருந்து கொடுத்ததில் குளறுபடி நேர, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பிள்ளையை மருத்துவமனையில் சேர்த்தனர். டேனி, மனைவி பாபி தனது ஸிஸோபெரெனியாவுக்கு சாப்பிட வேண்டிய மருந்தை தவறுதலாக மகனுக்கு கொடுத்ததாக  கூறினார். இந்த புகாரால் இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது. பிறகு, விவாகரத்து செய்துகொண்டனர்.

பாபிக்கு  நிறைய பிரச்னைகள் தொடங்கின. வயிற்றில் கட்டி, கருப்பையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதை அகற்றியது, குடல் புண், நிம்மோனியா என நிறைய முறை மருத்துமனைக்குச் சென்று வந்தார். கை உடைந்து சரியாக கூடி வரவில்லை. அதற்கு ம் கூட அறுவைசிகிச்சை செயதுகொண்டார்.

தொடர்ச்சியாக தாக்கிய நோய்கள், குழந்தை இன்மை, விவகாரத்து என நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே பாபியின் மனநிலையை உருக்குலைத்தன. தனக்குத்தானே தானே என்று வாழ்ந்தவர், மனநல மருத்துவமனைக்கு தானே சென்று சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஓராண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டே கிடைக்கும் நேரத்தில் செவிலியர் பணிகளை செய்து வந்தார்.

ஹில்வியூ மேனர் என்ற மருத்துவமனையில் பாபி வேலைக்கு சேர்ந்தார். அங்கு, செவிலியராக இருக்கும்போது கத்தியால் மணிக்கட்டை அறுத்துக்கொள்வது, தனது யோனியைக் கிழித்துக்கொள்வது, திடீரென மயங்கி விழுவது ஆகிய சிக்கல்களில் சிக்கினார். பிறகு மனநல ஆலோசகரிடம் தனக்கு வாழ்வில் ஏற்பட்ட சூழல்களால் தன்னைத்தானே  காயப்படுத்திக்கொண்டதாக கூறினார். வேலையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சிக்கல்களால் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சென்றார்.

நிறைய பணிகளை மாறிமாறி  செய்தாலும் உடலில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார். அதனுடன் தினசரி போராடி வந்தார். அதேசமயம் செவிலியர் வேலையையும் விடவில்லை. நார்த் ஹாரிசோன் ஹெல்த் சென்டரில் வேலை பார்த்தார்.செவிலியர்களை மேற்பார்வை செய்யும் வேலை. இரவு பதினொன்று தொடங்கி காலை ஏழுமணி வரையும் வேலை. இந்த நேரத்தில் தான் பாபி விஸ்வரூபம் எடுத்தார். ஏராளமான நோயாளிகளைக் கொன்றார். அஜி மார்ஸ் என்ற பெண்மணி முதலில் இறந்தார். இவருக்கு வந்து 97. வயது அதிகம். தள்ளாமை என்பதால் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. அடுத்து லார்சன் என்ற 94 வயது பெண்மணி இன்சுலின் மருந்து அதிகம் செலுத்தப்பட்டு இறந்துபோக இருந்தார். மருத்துவர்கள் கடும் பிரயத்தனம் செய்து அவரைக் காப்பாற்றினார். அவருக்கு நீரிழிவு கிடையாது. அவருடைய அறையில், இன்சுலின் மருந்தை வைத்திருந்தவர் பாபி. இதுபற்றியும் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.

சிறிது நாட்களில் பாபியின் ஷிப்டை, மயான நேரம் என மருத்துவமனையில் அனைவரும் திகிலாக சொல்லத் தொடங்கினர். பாபி, பதிமூன்று கொலைகளை செய்தார். இதில் பாதி இன்சுலின் ஊசியைப் போட்டு என்றால், மீதியை தீ விபத்து என மாற்றிக்கொண்டார். கொலைகள் அதிகரித்த காரணத்தால், மருத்துவமனை நிர்வாகம் அதை குற்ற வழக்காக கருதியது. புகார் கொடுத்தது. எனவே,  காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.  பாபி பெரிதாக தப்பிக்க வழியேதும் இல்லை. அவர து பணி நேரத்தில்தான் நிறைய கொலைகள் நடந்திருந்தன. பயன்படுத்திய  இன்சுலின் மருந்துகள் ஆதாரங்களாக காட்டப்பட்டன.

பாபி மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். காவல்துறை  விசாரணையை நிறுத்த மர்ம தொலைபேசி அழைப்புகளை செய்தார். ஆனால் ஏதும் எடுபடவில்லை. அவரது மனநல மருத்துவ சிகிச்சை குறிப்புகளை வழக்கில் சேர்த்தனர். பாபியின் செவிலியர் உரிமம் ரத்தானது. 1988ஆம் ஆண்டு அவர் செய்த குற்றங்களுக்கு 60 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

 படம் - பின்டிரெஸ்ட் 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்