இடுகைகள்

சந்தை வணிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களைச் சுற்றியே ரோல்மாடல்கள் நிறையப் பேர் உண்டு! பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா

படம்
  பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் பெனு சேகல் இயக்குநர், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா பெனு, 23 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஆம்பியன்ஸ், டிஎல்எஃப் யுடிலிட்டிஸ், இன்டர்நேஷனல் ரீகிரியேஷன் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர். ரீடெய்ல் துறையில் விநியோகம், வணிக முறை, இடங்களை வாடகைக்கு பிடிப்பது என பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.  உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலை படித்துள்ளவர், மனிதவளத்துறை நிர்வாகத்திலும் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளார். அவரிடம் பேசினோம்.  ரீடெய்ல் தொடர்பான வணிகத்தை எப்படி கையில் எடுத்தீர்கள்? தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்லுவார்கள். இந்த இயல்பு நம் அனைவருக்குள்ளும் இருக்கும். சிலர் தொடக்கத்திலேயே இதை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறர் இந்த தீப்பொறியை வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.  வணிகம் என்பது எனக்குத் அப்படித்தான் வந்தது. இத்தனைக்கும் நான் முதுகலை படித்தது உயிரி தொழில்நுட்பம் மற்றும் வேதியியல் தான். ஆனால், நான் என் வேலைவாய்ப்பை அதில் தேடவில்லை. கல்லூரியில் மாணவர்களின் தலைவராக இருந்தவ