இடுகைகள்

ஃபுகாகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாப் 1 அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் ஃபிரான்டியர்!

படம்
  உலகின் வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்!  டாப் 500 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் புதிதாக இடம்பிடித்துள்ளது. இதன்  பெயர், ஃப்ரான்டியர்  எக்ஸாஸ்கலே கணினி  என அழைக்கின்றனர்.  எக்ஸாஸ்கலே கணினி ஒரு நொடிக்கு, குயின்டில்லியன் கணக்குகளை போடும் திறன் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு பூமியிலுள்ள அனைத்து மனிதர்களும் 24 மணிநேரமும் கணக்கு போடுவதை இக்கணினி ஒரு நொடியில் போட்டுவிடும்.  ஜப்பானில் உள்ள ஃபுகாகு என்ற சூப்பர் கணினியை ஃபிரான்டியர் கணினி பின்னுக்கு தள்ளியுள்ளது. கணினியின் வேகத்தை பெட்டாஃபிளாப்ஸ் என்று அழைக்கின்றனர்.  இந்த வகையில் ஃபுகாகுவின் வேகம் 442 பெடாஃபிளாப்ஸ்களாக உள்ளது.  ஃபிரான்டியர் , 1 எக்ஸாஸ்கேல் என்பது 1000 பெடாபிளாப்ஸ்க்கு ஒப்பானது. இந்த வகையில் எக்ஸாஸ்கேல், பட்டியலில் முதன்மையாக உள்ள நான்கு கணினிகளையும் தாண்டிய திறனைக் கொண்டுள்ளது.  ஃபிரான்டியர் சூப்பர் கணினி 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இதனை அமெரிக்க ஆற்றல் துறையில் தேசிய ஆய்வகத்தில் சோதித்து வருகிறார்கள்.  இப்போதைக்கு டாப் சூப்பர் கணினிகளைப் பார்ப்போமா 1 . ஃபிரான்டியர் 2. ஃபுகாகு, ஜப்பான் 3. லூமி, ப