இடுகைகள்

ராஜ்குமார் ராவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரனிடமிருந்து தங்கையைக் காக்க போராடும் மனநல குறைபாடு கொண்ட பெண்! - ஜட்ஜ்மென்டல் ஹை கியா?

படம்
  ஜட்ஜ்மென்டல் ஹை கியா ராஜ்குமார் ராவ், கங்கனா ரணாவத் இயக்கம் பிரகாஷ் கோவலமுடி கதை, திரைக்கதை, வசனம் – கனிகா தில்லான்   குடும்ப வன்முறை காரணமாக சிறுவயதில் இருந்தே மனநலக்குறைபாடு கொண்டவள் பாபி. தனது பாதிப்பினூடே சீரியல் கொலைகாரன் ஒருவனை எப்படி கண்டுபிடித்து அவனிடமிருந்து தன் தங்கையைக் காக்கிறாள் என்பதே மையக் கதை.   சைக்கோசிஸ் வந்த நோயாளியாக பாபி இருக்கிறாள். இவளை பைத்தியம் என்று பலரும் பேசினாலும் அவளது உலகத்தில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையில்   பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறாள். செய்யும் அதிரடி காரியங்களுக்காக நீதிமன்றம் விதிக்கும் அபராதம் கூட கட்டமுடியாத நிலை. நான் மனநல மையத்திற்கு போகிறேன். அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்   என்று செல்பவளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? குடும்ப வன்முறை காரணமாக அவளது அப்பா, அம்மாவை அடித்து உதைத்து வசைபாடுகிறார். ஒருநாள் ஹோலி பண்டிகை அன்று இன்னொருவரோடு சேர்ந்து நடனம் ஆடினாள் என தனது மனைவியை பாபியின் அப்பா அடித்து உதைக்கிறார். அம்மா அடிபடுவதிலிருந்து காப்பாற்ற பாபி முயலும்போதுதான் பெற்றோர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்த

கதையும் இயக்குநரும்தான் படத்திற்கு மிக முக்கியம்! - ராஜ்குமார் ராவ், இந்தி சினிமா நடிகர்

படம்
  ராஜ்குமார் ராவ் இந்தி சினிமா நடிகர் நீங்கள் பதாய் டோ படத்தில் நடித்த ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரமான ஷர்துல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு உங்கள் நீங்கள் எப்படி தயார் செய்துகொண்டீர்கள்? ஷர்துல் பாத்திரம் பிற ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரம் போல இருக்க கூடாது என முன்னமே நினைத்தோம். அந்த பாத்திரம் உண்மையாக இருக்கவேண்டுமென நினைத்தோம். சிறுநகரம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவனின் வாழ்க்கையில் பாலியல் என்பது சிறுபங்கு வகிக்கிறது. ஆனாலும் அது முக்கியமானது. தன்னை வெளிக்காட்டாமல் அவன் வாழ்கிறான். அவனைப் போலுள்ள பிறர் அவனை தொடும்போது அது அவனுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் விழிப்பாகவே இருக்கிறான். நானும் படத்தின் இயக்குநரான வர்தான் குல்கர்னி இந்த நீளத்திற்குத்தான் பாத்திரம் பற்றி பேசினோம். இதைத்தாண்டி கூடுதலாக நான் ஏதும் செய்யவில்லை. காதல் என்பது நீங்கள் உணர்வது அதனை வெளிக்காட்டலாம்.  ஷர்துல் ஒரு ஆணழகன். கட்டழகு உடலுக்காக பயிற்சி செய்தது கடினமாக இருந்தது. நான் சைவ உணவு சாப்பிடுபவன் என்பதால், சற்று கடினமான சவால்தான். ஆனாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். ஆண்மைத்தன்மை கொண்ட நாயகன் என்பதால்தான் பா

நட்சத்திரமாக என்னை நினைக்கவில்லை. நான் நடிகன்தான்! - ராஜ்குமார் ராவ்!

படம்
நேர்காணல் ராஜ்குமார் ராவ், இந்தி நடிகர் உங்களது மனதில் இப்போது என்ன உணர்வு உள்ளது? மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் பிளான் பி ஏதும் கிடையாது. நடிக்கவேண்டும் என நினைக்கிறேன். இதனை என் வாழ்நாள் முழுக்க செய்ய ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். இயக்குநர் ஹன்சல் மேத்தாவுடன் அதிக படங்களை செய்கிறீர்களே? அவருடன் முதல் படம் பணியாற்றியபோது 2013ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இப்போது மீண்டும் அவரோடு இணைந்து ஐந்தாவது படம் செய்கிறேன். வேலை என்பதைத் தாண்டி அவர் என் குடும்ப நண்பர் போல ஆகிவிட்டார். காரணம், நாங்கள் சினிமாவின் மீது வைத்துள்ள ஆர்வம், ஆசைதான். நாங்கள் இருவரும் சொல்ல நினைக்கும் கதைகளை விஷயங்களை மக்களுக்குச் சொல்ல ஒன்றாக இணைகிறோம். நட்சத்திர அந்தஸ்து எப்படி இருக்கிறது? அப்படி ஒன்று எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் நடிக்க விரும்பி இங்கு வந்தேன். நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னை நம்பி அளிக்கும் கதாபாத்திரங்களுக்கு நேர்மையாக இருக்கவேண்டும். அவற்றை மக்கள் ரசிக்கவேண்டும். இறுதியாக நான் சொல்ல விரும்புவது நான் நடிகன் மாத்திரமே. இன்று படத்தின் கதையை முக்கியமாக பார்க்கிறார்