இடுகைகள்

ஜிதேந்திரகுமார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓடிடி தளங்களும் சினிமாவைப் போல டிரெண்டை செட் செய்யும் காலம் தூரத்தில் இல்லை! ஜிதேந்திரகுமார், நடிகர்

படம்
                  ஜிதேந்திரகுமார் நடிகர் நீங்கள் ஐஐடி காரக்பூரில் படித்துவிட்டு மும்பைக்கு வந்தவர் . ஆழ்வார் நகரிலிருந்து வந்த உங்களுக்கு எப்படி நடிகராகும் ஆர்வம் வந்தது ? நீங்கள் நகருக்கு வருகிறீர்கள் . அங்கு உங்களுக்கு யாரையும் தெரியவில்லை என்பது கடினமான ஒன்றுதான் . ஆனால் நான் யூட்யூப் பிரபலமாக இருக்கும்போது நகருக்கு வந்தேன் . அப்போது தி வைரல் பீவர் குழுவினருக்காக நான் வீடியோக்களை இணைந்து பணிபுரிந்து வழங்கியுள்ளேன் . டிவிஎப் பிட்சர்ஸ் எனும் தலைப்பில் நாங்கள் வீடியோக்களை உருவாக்கி புகழ்பெற்றிருந்தோம் . சில போராட்டங்கள் இருந்தாலும் எப்போதும் வேலை இருந்தது . நாங்கள் டிஜிட்டல் ஊடகத்தில் தொடர்களை தயாரிக்க நினைத்தோம் . இதற்காக தயாரிப்பாளர்களை சந்தித்தபோது , இப்படி தொடர்களை தயாரிப்பது முக்கியமானது . எதிர்காலத்தில் திரைப்படங்களும் கூட இப்படி வெளியாகும் என்பதை கூறினோம் . இந்த வகையில் இப்படியொரு ஊடகம் உருவானது புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகளைத் தரும் . அப்படியென்றால் நீங்கள் டிஜிட்டல் ஊடகத்தை அறிமுகப்படுத்தியவர் என்று கூறலாம் அல்லவா ? ஆம் நீங்கள் அப்படியும்

சினிமா உலகை ஆச்சரியப்படுத்திய உலக நட்சத்திரங்கள்!

படம்
  மைத்ரேயி ராமகிருஷ்ணன் நாளைய நட்சத்திரங்கள் ஜிதேந்திரகுமார், இந்தியா சினிமாவுக்கு வந்த பொறியாளர்களின் வரிசையில் இவருக்கும் இடமுண்டு. சுப் மங்கள் ஜியாவ்தான் திரைப்படம், பஞ்சாயத் தொடர் ஆகியவை ஜிதேந்திரகுமாரின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதற்கு முன்னால் என்ன செய்துகொண்டிருந்தார்? ஜப்பான் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கு வேலை செய்தபோது, அவருக்கு சினிமாவின் மீதான வேட்கை தோன்றியது. பின்னர் மும்பைக்கு சென்று தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். பிறகு நடிகரானது, வென்றது நாம் அனைவரும் அறிந்ததுதானே? சாங் வெய் லாங், சீனா 2018ஆம் ஆண்டு அன்டச்சபிள் லவ்வர் என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு மூன்றே ஆண்டுகளில் முக்கியமான பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகிவிட்டார்.  Go Ahead, Beautiful Reborn Flower  and  In a Class of Her Own ஆகிய படங்கள் இவர் நடித்ததில் முக்கியமானவை. ஆசியா பசிபிக் பகுதியில் இவரது முகம் பல்வேறு பொருட்களை மிகவும் பிரபலமாக்கி வருகிறது.  துஸோ எம்பெடு, அமெரிக்கா தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடிகை. இரண்டு முறை எம்மி