இடுகைகள்

ஷி ஜின்பிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம்!

படம்
  ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் சீன அதிபர் ஐரோப்பாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தருகிறார். அமெரிக்காவுடன் வணிகப்போர் நடந்துவருகிற நிலையில், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது இதுவரையில் விட்டுப்போன உறவை மீண்டும் உருவாக்குவதற்காகவே என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு ஜின்பிங் செல்லவிருக்கிறார். அதிகாரப்பூர்வ பயணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளும் இருக்கும் என்பது எதிர்பார்க்க கூடியதே. ஆசியாவில் சீன முக்கியமான வளர்ந்து வரும் சக்தி. பிற நாடுகள் சாதி,மதம், இனம் என பிரிவினைக்குள்ளாகி வரும் நிலையில் தனது செல்வாக்கை திட்டமிட்டு வளர்த்துக்கொள்ளும் விதத்தில் சீனா சாமர்த்தியசாலிதான். ஒரே கட்சியைக் கொண்ட தீவிர கண்காணிப்பு முறையைக் கொண்ட நாடு சீனா.  அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை சீனா பிரிக்க முயல்கிறதோ என நினைக்கலாம். 1999ஆம் ஆண்டு மே ஏழாம்தேதி பெல்கிரேட்டில் உள்ள சீன தூதரகத்தில் நேட்டோ படையின் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று சீன பத்திரிகையாளர்கள் இறந்துபோன...

ஹாங்காங்கின் சுதந்திர பேச்சுரிமைக்கு போராடிய ஜிம்மி லாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாமா?

படம்
  ஜிம்மி லாய், நிறுவனர், ஆப்பிள் டெய்லி நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ், ஹாங்காங் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி லாய்க்கு வழங்கலாம்! நான் ஒரு பத்திரிகையாளர். எனவே, இதை சொல்வது பாகுபாடாக தோன்றலாம். இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஹாங்காங்கைச் சேர்ந்த பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு வழங்கப்படலாம் என நினைக்கிறேன். ஹாங்காங்கில் உள்ள ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழின் உரிமையாளர் ஜிம்மி லாய். கருத்து சுதந்திரம், மனித உரிமைகளுக்காக போராடும் மனிதர். பொதுவாக தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளோடு ஒத்துப்போய்விடுவார்கள். அவர்களை மீறி உண்மையை பேசுவதால் இழப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்கும். ஜிம்மி லாய் தனது சொத்துக்களைக் கூட இழந்து சிறைக்குச் செல்ல துணிந்துவிட்டாரர். பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தபோது ஒரு நாடு இரண்டு சட்ட அமைப்பு முறை என்ற அடிப்படையில் அன்றைய அதிபர் டெங் ஜியாவோபிங் அதை ஏற்றார். அதன்படி ஐம்பது ஆண்டுகள் ஹாங்காங் செயல்படுவது ஒப்பந்த விதிமுறை. அந்த வகையில் அதன் குடியுரிமைகள், சுதந்திரமான அமைப்புகள் செயல்படும். உண்மையில் டெங் கொடுத்த வாக்குறுதி, அதாவது உ...