இடுகைகள்

ரேஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணவீக்கத்தால் பசியில் படுக்கும் ஏழை குடும்பங்கள்!

படம்
  பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாக உள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வட இந்தியாவில் ரொட்டியுடன் சாப்பிட காய்கறிகள் இல்லாமல் உப்பை மட்டும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு வருகிறார்கள். இறைச்சி, பால், முட்டை என குழந்தைகளுக்குத் தேவையான எதையுமே அவர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழல் உள்ளது.  பணவீக்கம் காரணமாக பருப்பு, காய்றிகளை மூன்று வேளை உணவில் ஒரே முறை சேர்த்துக்கொள்ளும் படி நிலைமை மாறிவிட்டது. மும்பையைச் சேர்ந்தவர் அஃப்சனா. இவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த குழந்தைகளுக்கு ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார். இவரது கணவர் துணிக்கடை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருவரின் ஊதியமாக மாதம் 50 ஆயிரம் கிடைத்து வந்தது. அதை வைத்துத்தான் சேமிப்பையும் ஒரு லட்சம் வரையில் உயர்த்த முடிந்தது. இவர்களுக்கு மூன்று பெண்கள் உண்டு.  மூன்று குழந்தைகளுக்கும் முதலில் கறி, காய்கறி, பால், முட்டை என கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இடையில் குறுக்கிட்ட லாக்டௌன் காலம் இதுவரையிலான வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. அஃப்சனா சேர்த்து வைத்த சேமிப்புகள் காலியாகிவிட்டன. அடுத்து, அவரின் கணவருக்கு வேலை

விவசாய சீர்திருத்த புரட்சி 2.0 வெல்லுமா? - பஞ்சாப் விவசாயிகள் டேட்டா கார்னர்

படம்
          விவசாய புரட்சி 2.0 என்று பிரதமர் மோடி அறிவித்த விவசாய சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளின் தீவிரமான போராட்டங்களில் முடிந்திருக்கிறது . கோவிட் -19 காலத்திலும் கூட விவசாய சீர்திருத்தங்களை சரியாக செய்துவிடவேண்டும் என்கிற வேட்கை தணியாமல் அதனை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு . இச்சட்டம் மூலம் விவசாயிகள் அரசின் மண்டிக்கு பொருட்களை விற்றே தீரவேண்டிய கட்டாயம் இனி இல்லை . அவர்கள் விருப்பம் போல பிற மாநிலங்களுக்கு கூட விற்கலாம் . தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் . மேலும் தனியார் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்த விவசாயமும் இனி நாடெங்கும் பெருகும் வாய்ப்புள்ளது . செப்டம்பரில் இம்மசோதாவை அரசு மக்களவையில் தாக்கல் செய்தது . உடனே உணவு பதப்படுத்ததல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார் . அவரது கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியும் பாஜக அரசின் கூட்டணியிலிருந்து விலகியது . பஞ்சாப்பில் வேர் கொண்டுள்ள கட்சி இது என்பதால் , மெல்ல போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின . பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் , மத்திய அரசின் சட்டங்களுக்கு பதில் வேறு சட்டங்களை இ

இடம்பெயரும் மக்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

படம்
ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் பற்றி.... நேர்காணல் ரவி காந்த், செயலர், பொது விநியோகத்துறை ஒரு நாடு ஒரே ரேஷன்கார்டு பற்றிச் சொல்லுங்கள்.  நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு என்பது உணவு பாதுகாப்புச்சட்டப்படி விரைவில் அமலாகவிருக்கிறது. இதன்படி, வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், தங்களது விரல்ரேகையை வைத்தாலே குறைந்த விலையில் அரிசி, பருப்பை பெற்று பயன்பெற முடியும். இதற்காக புதிய கார்டுகளை பெற வேண்டியதில்லை. இக்கார்டுகளை போலியாக பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்? அதற்கான பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறோம். அவர்களிடம் பெறும் கைரேகை  போன்றவற்றை பயன்படுத்தி அவர் பெறும் உணவுப்பொருட்களை அளவைக் கண்காணிக்க முடியும். மத்திய தகவல் தளத்தில் எப்படி பதிவு செய்து கண்காணிப்பீர்கள்? அதற்குத்தான் பிஓஎஸ் இயந்திரம் உள்ளதே. அதன்மூலம் செய்யப்படும் உணவு ஒதுக்கீடு அனைத்தும் மத்திய அரசின் தகவல் தளத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் பயனர் இந்தியாவில் எங்கு என்னென்ன பொருட்களை வாங்கினார் என்று அறிய முடியும். எந்தெந்த மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்கள்? வட

உணவுக்கான ரேஷன் தேவையா? சேட்டன் பகத்!

படம்
Giphy.com நாம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிறது. இதை எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்? நிச்சயம் அது உங்கள் கவனத்திலேயே இருக்காது. காரணம், நாம் இன்னும் வறுமை நாடாகவே இருக்கிறோம். உங்களில் வீட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வந்துவிட்டன. ஆனாலும் அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கிறீர்கள். அரசு குடிமகன்களுக்கான உணவு, உடை, வாழிடம் கொடுப்பது கடமை. இதில் கூடுதலாக மின்சாரத்தையும் சேர்க்கலாம்தானே? இவற்றை உருவாக்கிக்கொள்ளும் வேலை தந்துவிட்டால் மக்களுக்கு யாரையும் சார்ந்து நிற்க வேண்டியதில்லை. ஆனால் மக்களிடம் பிரச்னை எழுந்தால்தானே தேர்தலில் அரசியல்வாதிகள் வெல்ல முடியும்? pixabay எனவே அவர்கள் வறுமை ஒழிக்க வேலை பெற்றுத்தருவதை விட ரேஷனில் மாதம் அரிசி, காய்கறி, சர்க்கரை என வழங்குவது எளிது. நாமும் இந்த அவலத்தை மனப்பூர்வமாக ஏற்று இந்தியாவை தலைகுனிய வைக்கிறோம். அரசு வழங்கும் பொருட்களை பெறும் நிலையில் உள்ள வறுமையான குடும்பங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. ஆனாலும் நாம் ரேஷன் கார்டிலுள்ள பொருட்களை மனத்தயக்கமின்றி சென்று வாங்குகிறோமே ஏன்?  எனக்கு அரசின் இலவசப் பொருட்கள்