இடம்பெயரும் மக்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!




disgusted david schramm GIF by HULU


ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் பற்றி....


நேர்காணல்

ரவி காந்த், செயலர், பொது விநியோகத்துறை






ஒரு நாடு ஒரே ரேஷன்கார்டு பற்றிச் சொல்லுங்கள். 

நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு என்பது உணவு பாதுகாப்புச்சட்டப்படி விரைவில் அமலாகவிருக்கிறது. இதன்படி, வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், தங்களது விரல்ரேகையை வைத்தாலே குறைந்த விலையில் அரிசி, பருப்பை பெற்று பயன்பெற முடியும். இதற்காக புதிய கார்டுகளை பெற வேண்டியதில்லை.

இக்கார்டுகளை போலியாக பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்?

அதற்கான பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறோம். அவர்களிடம் பெறும் கைரேகை  போன்றவற்றை பயன்படுத்தி அவர் பெறும் உணவுப்பொருட்களை அளவைக் கண்காணிக்க முடியும்.


மத்திய தகவல் தளத்தில் எப்படி பதிவு செய்து கண்காணிப்பீர்கள்?

அதற்குத்தான் பிஓஎஸ் இயந்திரம் உள்ளதே. அதன்மூலம் செய்யப்படும் உணவு ஒதுக்கீடு அனைத்தும் மத்திய அரசின் தகவல் தளத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் பயனர் இந்தியாவில் எங்கு என்னென்ன பொருட்களை வாங்கினார் என்று அறிய முடியும்.

எந்தெந்த மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்கள்?

வடகிழக்கு மாநிலங்களில் இதனை உடனடியாக செயல்படுத்த முடியாது. பிற மாநிலங்களில் இத்திட்டத்தை மெஷின்களை அனுப்பித்தந்து அடுத்த நிதியாண்டில் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர உள்ளோம்.

நன்றி - இடி மேகசின்








பிரபலமான இடுகைகள்