பெட்ரோலிய கழிவை அகற்றுமா நுண்ணுயிரிகள்?



ஈராக்கில் பெட்ரோலியக் கழிவுகளை அகற்றி, நிலங்களை தூய்மை செய்ய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்த உள்ளனர். ஐ.நா அமைப்பு இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதனுடன் அரசின் எண்ணெய் நிறுவனம் நார்த் ஆயில் கோவும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இத்திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன.

ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கு போர் புரிந்தபோது பனிரெண்டிற்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தீவைத்து அழித்தனர். இதன் விளைவாக சூரியனின் ஒளியை மக்கள் பார்க்க முடியாதபடி புகை வானை சூழ்ந்தது. ஏறத்தாழ 20 ஆயிரம் டன்கள் கச்சா எண்ணெய் இம்முறையில் வீணாக்கப்பட்டிருக்கலாம் என்கிறது அரசு.

எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால் தொழிலால் ஏற்படும் மாசுபாடுகளை சிறிது கவனத்தில் கொள்வது நல்லது. இல்லையெனில் இயற்கை மாசுபாட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் வலீத் ஹூசைன். இவர்தான் ஈராக்கின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்.

நன்றி - டவுன் டு எர்த்